மறுக்கப்பட்ட உரிமைக்காக போராடிய எம் இனத்தின் மாபெரும் விடுதலைப் போராட்டத்தை முள்ளிவாய்க்கால் வரை பல்வேறு சதிகள் மூலம் மௌனிக்க வைத்த இலங்கை அரசாங்கம் அந்த கால கட்டத்தில் கொத்து கொத்தாக கொல்லப்பட்ட எமது அப்பாவி பொது மக்களின் நினைவினை கூறும் முகமாக யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்ட தூபியை மனிதநேயமற்ற வகையில் கோழைத்தனமாக இராணுவ இயந்திரத்தின் அடக்கு முறையில் இரவோடு இரவாக அழித்தமையை வன்மையாக கண்டிக்கின்றேன்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கப் பெறாது மக்கள் தொடர்ந்தும் அவல வாழ்வுடன் பல்வேறு பிரச்சனைகளை முன்னிறுத்தி ஜனநாயக போராட்டங்களை முன்னேடுத்துகொண்டு வருகின்ற காலப்பகுியில் பொறுப்புடன் செயற்பட வேண்டிய பல்கலைக்கழக நிர்வாகம் கூட குறிப்பாக துணை வேந்தர் அவர்கள் முன் பின் முரனான ஓர் இனத்தின் ஆன்மாவுடன் சம்மந்தப்பட்ட விடயத்தில் நடந்து கொள்வது எங்களுக்கு பல சந்தேகங்களை வெளிப்படுத்தி உள்ளதுடன் இன்னோருபக்கம் எங்களை வெட்கித் தலைகுனிய வைக்கின்றது.
இவ் விடயத்தில் சம்மந்தப்பட்ட தரப்பு யாராக இருந்தாலும் மன்னிக்க முடியாது இதற்கு சரியான நீதியை பெற்றுக்கொடுப்பது இந்த அரசாங்கத்தினதும் துணைவேந்தரினதும் கட்டாய பொறுப்பாகும்.
இந்த செயற்பாடை கண்டித்து நாளைய தினம் எமது வடகிழக்கு தமிழர் தாயகம் தழுவிய கதவடைப்பு போராட்டத்திற்கு அனைவரையும் கட்சி பேதமின்றி ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
து.ஈசன்
பிரதி முதல்வர் யாழ் மாநகரசபை
ரெலோ யாழ் மாவட்ட பிரதி அமைப்பாளர்