Hot News
Home » செய்திகள் » மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு உரிய கவனம் செலுத்தியுள்ளது

மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு உரிய கவனம் செலுத்தியுள்ளது

மாகாண சபை தேர்தலை நடத்துவதில் உள்ள சிக்கல் நிலைக்கு தீர்வு கண்டு தேர்தலை விரைவாக நடத்துமாறு அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் முன்வைத்துள்ள கோரிக்கை குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு உரிய கவனம் செலுத்தியுள்ளது.என தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் அரசியல் கட்சி செயலாளர்களிடம் தெரிவித்தார்கள்.

தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம் பெற்றது.

இச்சந்திப்பு குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது.

2020ஆம் ஆண்டுக்கான தேர்தல் வாக்காளர் பெயர்பட்டியல் மீள்பரிசீலனை நடவடிக்கைகளுக்காக அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் ஒத்துழைப்பு வழங்குவது குறித்து கட்சி செயலாளர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டதுடன் அதனூடாக அனைவரது தகவல்களையும் பெற்றுக் கொள்ள முடியும்.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வருடாந்த கணக்கறிக்கை அதிகாரிகள் குழு திருத்தம் மற்றும் கட்சி அரசியலமைப்பு திருத்தம் ஆகியவற்றை உடனடியாக தேர்தல்கள் ஆணைக்குழுக்கு சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.

தேர்தல்கள் சட்ட திருத்தம் தொடர்பில் பேசப்பட்டு வருவதன் காரணமாக அது தொடர்பான யோசனைகளை பாராளுமன்ற தெரிவு குழுவுக்கு முன்வைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டது.

மாகாண சபை தேர்தலை நடத்துவதில் தற்போது நடைமுறையில் உள்ள சிக்கல் நிலையினை நிவர்த்தி செய்து தேர்தலை உடனடியாக நடத்துமாறு அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.இக்கோரிக்கை குறித்து ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளது.

TELO Admin