Hot News
Home » செய்திகள் » சகீர் ஹுசைனின் மின்னஞ்சலை பரிசோதிக்க இந்திய விசாரணையாளர்கள் தயாராகின்றனர்

சகீர் ஹுசைனின் மின்னஞ்சலை பரிசோதிக்க இந்திய விசாரணையாளர்கள் தயாராகின்றனர்

இலங்கையில் உள்ள பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் இந்தியாவுக்கு அனுப்பி உளவுப் பணிகளை மேற்கொண்டதாக கூறப்படும் இலங்கையரான சகீர் ஹுசைன் சென்னையில் உள்ள அமரிக்க தூதரக அதிகாரிகளின் நடமாட்டங்களையும் அவதானித்து வந்ததாக இந்திய விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

இந்த இலங்கையரிடம் இருந்து கொழும்பில் உள்ள பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகரகத்தின் வீசா அலுவலரான சித்தீக் மற்றும் ஷா ஆகிய இரண்டு அதிகாரிகளே தமிழகம் மற்றும் கர்நாடகா ஆகியயவற்றின் தகவல்களை பெற்றுவந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாம் இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் உட்பட்ட இடங்களில் புகைப்படங்களை எடுத்து இலங்கையில் உள்ள பாகிஷ்தானிய உயர்ஸ்தானிகரத்துக்கு மின்னஞ்சலில் அனுப்பியதாக சகீர் ஹ-சைன் குறிப்பிட்டுள்ளார். இதற்காக தமக்கு 20 ஆயிரம் ரூபா வரை வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் தமது மின்னஞ்சல் முகவரியில் யாரோ தாக்குதல் நடத்தியுள்ளமையால் தமக்கு அதனை திறக்கமுடியாதுள்ளதாக ஹ_சைன் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அவரின் மின்னஞ்சலை திறக்க விசாரணை அதிகாரிகள் தொழில்நுட்ப அலுவலர்களின் உதவியை நாடியுள்ளனர்.

ஏற்கனவே ஒருமுறை போலியான கடவுச்சீட்டை வைத்திருந்தமை தொடர்பில் ஹுசைன் திருச்சி விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டு விடுவிக்கப்பட்டவர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

TELO Media Team 1