Hot News
Home » செய்திகள் » புலம்பெயர்ந்த அமைப்புகள் மீதான தடை!- இலங்கை நியுசிலாந்துக்கு விளக்கம்

புலம்பெயர்ந்த அமைப்புகள் மீதான தடை!- இலங்கை நியுசிலாந்துக்கு விளக்கம்

விடுதலைப் புலிகளின் சர்வதேச நிதி பறிமாற்றம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் நியுசிலாந்திடம் விளக்கமளித்துள்ளது.

இரண்டு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுமான ஜீ.எல்.பீரிஸ் மற்றும் மரேய் மெக்கலி ஆகியோர் ஒக்லேண்டில் வைத்து சந்தித்த போது இந்த விடயம் தொடர்பில் பேசப்பட்டுள்ளது.

இலங்கை வெளிவிவகார அமைச்சின் அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் மரே மெக்கலி தொடர்ந்து மூன்று முறை இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு இலங்கை தொடர்பில் சாதகமான கருத்துக்களை வெளியிட்டமைக்கு, ஜீ.எல்.பீரிஸ் இதன் போது நன்றி தெரிவித்துள்ளார்.

அத்துடன் அமெரிக்க பிரேரணைக்கு ஆதரவளிக்காமை தொடர்பிலும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

பின்னர் அண்மையில் புலம்பெயர்ந்த அமைப்புகள் மற்றும் தனியாட்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் விடுத்திருந்த தடை குறித்தும் அவரால் விளக்கமளிக்கப்பட்டது.

TELO Media Team 1