Hot News
Home » செய்திகள் » அரச பணியில் இருந்து நீக்கப்பட்ட அலுவலர் இலங்கை தமிழர்களுக்காக பாதயாத்திரை

அரச பணியில் இருந்து நீக்கப்பட்ட அலுவலர் இலங்கை தமிழர்களுக்காக பாதயாத்திரை

இந்திய சுங்க திணைக்களத்தில் இருந்து இடைநிறுத்தப்பட்ட அதிகாரி ஒருவர் இலங்கையில் போர்க்குற்றம் தொடர்பில் இந்தியா யோசனை ஒன்றை ஐக்கிய நாடுகளில் முன்வைக்க வேண்டும் என்று கோரி, பாதயாத்திரையை மேற்கொண்டுள்ளார்.

50 வயதான பாலசுப்பிரமணியம் என்பவரே இந்த பாதயாத்திரையை மேற்கொண்டுள்ளார்.

2003 ஆம் ஆண்டு சேவையில் இணைந்த இந்த அலுவலர் கடந்த ஏப்ரல் 18 ஆம் திகதியன்று சென்னையில் தமது பாதயாத்திரையை ஆரம்பித்துள்ளார்.

நேற்று அவர் தூத்துக்குடியை சென்றடைந்தார்.

2009 ஆம் ஆண்டு பெப்ரவரி 3ம் திகதியன்று இலங்கையில் போர் நிறுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி உண்ணாவிரதம் மேற்கொண்டமையை அடுத்து பாலசுப்பிரமணியம் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டார்.

இதனையடுத்து 2009 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அவர் தமது பதவியை ராஜினாமா செய்தார்.

எனினும் அரசசேவையில் இருந்தபோது உண்ணாவிரதம் மேற்கொண்டமைக்காக அவர் மீது ஒழுக்காற்று விசாரணை நடத்தப்பட்ட போதும் இன்னும் அது தொடர்பில் முடிவுகள் அறிவி;க்கப்படவில்லை.

இந்தநிலையில் அரச அதிகாரி என்ற வகையில் தாம் அரசாங்கத்துக்கு அறிவுரையை கூறுவதற்கு உரிமையுண்டு.

அதன் அடிப்படையிலேயே தாம் சேலத்தில் உண்ணாவிரதம் மேற்கொண்டதாக பாலசுப்பிரமணியம் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இலங்கையின் இறுதிப்போர் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்படுமானால் அது தமிழர்களுக்கு மாத்திரம் அல்ல அனைவருக்கும் நன்மையை தரும் என்று பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

TELO Media Team 1