Hot News
Home » செய்திகள் » இஸ்லாம் மதத்தில் இருந்து அஸ்வர் எம்.பி. விலக்கப்பட்டுள்ளார்?

இஸ்லாம் மதத்தில் இருந்து அஸ்வர் எம்.பி. விலக்கப்பட்டுள்ளார்?

கசினோ சூதாட்டத்திற்காக தொடர்ந்தும் குரல் கொடுத்துவரும் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர், இஸ்லாம் மதத்தில் இருந்து விலக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக அஸ்வர் உயிரிழந்தால், அவரை அடக்கம் செய்ய மயானமும் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள அஸ்வர்,

தலை பழுதாய் போனவர்கள் உலகில் இருக்கின்றனர். இவர்களில் சிலர் மனநல மருத்துவமனைகளிலும் சிலர் எம்முடனும் இருக்கின்றனர்.

காமினி ஜயவிக்ரம பெரேராவும் அப்படியானவர்களில் ஒருவர். இதனால் அவர் விசர்க் கதைகளை கூறி வருகிறார். இதனை பார்த்து எனது சமயத்தினர் சிரிக்கின்றனர்.

கசினோ சூதாட்டத்திற்கு ஆதரவாக பேசியதால், என்னை இஸ்லாம் மதத்தில் இருந்து நீக்கி விட்டார்களா என என்னிடம் கேட்கின்றனர்.

பௌத்தர் ஒருவர் தவறு செய்தால், அவரை விகாரையில் இருந்து நீக்குவார்களா?. எமது சமயத்திற்கு அமைய நாங்கள் அனைவரும் நம்புவது கடவுளை.

காமினி ஜயவிக்ரம பெரேராவுக்கு கட்சியின் தவிசாளர் பதவியுமில்லை. வயதாகி விட்டதால் அவர் என்ன பேசுவதென்று தெரியாமல் பேசி வருகிறார்.

முன்னர் இருந்த ஜயவிக்ரம பெரேரா இப்போதில்லை. சிறிகொத்தவில் அருங்காட்சியகம் ஒன்றை அமைத்து அதில் அவரை வைக்க வேண்டும் எனவும் அஸ்வர் குறிப்பிட்டுள்ளார்

TELO Media Team 1