Hot News
Home » செய்திகள் » இலங்கை அகதிகள் தொடர்பில் கேர்ணல் ஹரிஹரன் எச்சரிக்கை! – புலிச் சந்தேகநபர்களை நாடு கடத்த இந்தியா இணக்கம்

இலங்கை அகதிகள் தொடர்பில் கேர்ணல் ஹரிஹரன் எச்சரிக்கை! – புலிச் சந்தேகநபர்களை நாடு கடத்த இந்தியா இணக்கம்

தமிழகத்தில் அண்மையில் கைது செய்யப்பட்ட தமிழ் அகதிகள் 10 பேர் தொடர்பில் இந்திய அரசாங்கமும்> தமிழக அரசாங்கமும் அவதானமாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்திய புலனாய்வு பிரிவின் முன்னாள் தலைவர் கேர்ணல் ஹரிஹரன் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் இருந்து அகதிகளாக சென்ற அவர்களில் மூன்று ஆண்கள் முன்னாள் விடுதலைப் புலிகளின் போராளிகள்.

அவர்களுக்கு முன்னதாகவே இலங்கை அரசாங்கம் புனர்வாழ்வளித்திருந்தது.

அதன் பின்னரும் அவர்கள் தமிழ்நாட்டுக்கு தப்பி வந்துள்ளார்கள் என்றால்> இது சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அகதி முகாம்களில் தங்கியிருக்கும் புலிச் சந்தேக நபர்களை நாடு கடத்த இந்தியா இணக்கம்

அகதி முகாம்களில்ழ தங்கியிருக்கும் தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர்களை நாடு கடத்த இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிப் பயங்கரவாதத்துடன் தொடர்புடைய சிலர் தமிழக அகதி முகாம்களில் தங்கியிருப்பதாக இலங்கை அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது,

இவ்வாறு தங்கியிருக்கும் சந்தேக நபர்களை நாடு கடத்த இந்தியா இணங்கியுள்ளது.

2010ம் ஆண்டு குற்றவாளிகளை பரிமாறிக் கொள்வது தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட ஒப்பந்தமொன்றின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

இந்த உடன்படிக்கையின் அடிப்படையில் குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் முகாம்களில் தங்கியிருந்தால் அவர்களை கைது செய்து நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என இந்தியா அறிவித்துள்ளது.

பயங்கரவாதத்திற்கு ஒத்துழைப்பு வழங்கியமை, சட்டவிரோதமான முறையில் பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டியமை, சட்டவிரோதமான முறையில் ஒன்றுகூடி இலங்கைக்கு எதிராக சூழ்ச்சித் திட்டங்களை தீட்டியமை உள்ளிட்ட சில குற்றச்சாட்டுக்கள், அகதி முகாம்களில் தங்கியிருப்பவர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளது.

அகதிகள் என்ற போர்வையில் தங்கிருக்கும் குற்றவாளிகள் தொடர்பான தகவல்களை இலங்கை அரசாங்கம், இந்திய வெளிவிவகார அமைச்சிடம் ஒப்படைத்துள்ளது.

இந்த ஆவணங்களை இந்திய அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது.

சந்தேக நபர்களை எவ்வாறு ஒப்படைப்பது என்பது குறித்து சட்ட மா அதிபர் திணைக்களம் உள்ளிட்ட நிறுவனங்களுடன் ஏற்கனவே பேசப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

TELO Media Team 1