Hot News
Home » செய்திகள் » கெசினோவுக்கு சான்றிதழ் இருந்தால் அதனை சமர்ப்பிக்குமாறு ஐ.தே.க கோரிக்கை

கெசினோவுக்கு சான்றிதழ் இருந்தால் அதனை சமர்ப்பிக்குமாறு ஐ.தே.க கோரிக்கை

இலங்கையில் ஏற்கனவே சட்ட அங்கீகாரத்துடன் கெசினோ வர்த்தகம் மேற்கொள்ளப்படுமாக இருந்தால், அதற்கான ஆதாரத்தை காட்டுமாறு ஐக்கிய தேசியக்கட்சி கோரியுள்ளது.

ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா இந்தக்கோரிக்கையை விடுத்துள்ளார்.

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அண்மையில் வெளியிட்ட கருத்து ஒன்றில், இலங்கையில் ஐந்து கெசினோக்கள் சான்றிதழ்களுடன் இயங்குவதாக தெரிவித்திருந்தார்.

எனவே அவுஸ்திரேலிய கெசினோ வர்த்தகர் ஜேம்ஸ் பெக்கர் இலங்கையில் கெசினோவை ஆரம்பிப்பது புதிய விடயம் அல்ல என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்தநிலையில் கெஹலியவின் கருத்தை சவாலுக்கு உட்படுத்தியுள்ள ஹர்சா, இலங்கையில் இயங்கும் ஐந்து கெசினோக்களின் ஒன்றின் சான்றிதழையாவது அமைச்சர் நாடாளுமன்றத்தில் முன்வைக்கவேண்டும் என்று கோரியுள்ளார்.

TELO Media Team 1