Hot News
Home » செய்திகள் » விக்னேஸ்வரன் பொது வேட்பாளர்?- எந்த திட்டமும் இல்லையென கூட்டமைப்பும் ஜ.ம.முன்னணியும் மறுப்பு

விக்னேஸ்வரன் பொது வேட்பாளர்?- எந்த திட்டமும் இல்லையென கூட்டமைப்பும் ஜ.ம.முன்னணியும் மறுப்பு

வட மாகாண சபை முதலமைச்சர் சி.வீ. விக்னேஸ்வரனை அடுத்த ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக நிறுத்துவது தொடர்பில் எந்த திட்டமும் இல்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஜனநாயக மக்கள் முன்னணியும் தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் ஆகியோர் கருத்து வெளியிட்டுள்ளனர்.

தமிழர்களுக்கு இதை விட இன்னும் நிறைய முக்கிய தேவைகள் உள்ளன. ஜனாதிபதி வேட்பாளர் குறித்து தற்போது முடிவு எடுக்கவில்லை.

ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளருக்கு தமிழ் மற்றும் முஸ்லிம் ஆதரவு மட்டுமல்ல, சிங்களவர்களின் ஆதரவும் இருந்தால் மட்டுமே வெற்றிபெற முடியும் என மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, முதல்வர் விக்னேஸ்வரன், தான் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவது தொடர்பாக எந்தக் கலந்துரையாடலிலும் ஈடுபடவில்லையென குறிப்பிட்டார்.

மேலும் விக்னேஸ்வரன் தேர்தலில் நிற்பதற்கு யாராவது ஆதரவு தெரிவித்தால், அதற்குரிய காரணத்தை வெளிப்படுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

TELO Media Team 1