Hot News
Home » செய்திகள் » சபையில் ஹிஸ்புல்லாஹ் ஆழ்ந்த நித்திரை

சபையில் ஹிஸ்புல்லாஹ் ஆழ்ந்த நித்திரை

பாராளுமன்றத்தில் இன்று முன்வைக்கப்பட்ட இலங்கை விமான விபத்துக்களை தடுப்பதற்கான ஒழுங்கு விதிகளை அங்கீகரிப்பதற்கான பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுவதற்கு மகளிர் மற்றும் சிறுவர் விவகார பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் பெயர் அழைக்கப்பட்டபோது அவர் ஆழ்ந்த நித்திரையில் இருந்தார்.சபைக்குத் தலைமை தாங்கிய குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்திரகுமாரினால் பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் பெயர் இரண்டு தடவை அழைக்கப்பட்டபோதும் அவர் எழுந்திருக்காததை அவதானித்த சபை ஊழியர் ஒருவர் ஓடிவந்து பிரதியமைச்சரை தட்டி எழுப்பினார்.இதனையடுத்து திடுக்கிட்டு எழுந்த பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தன்னை சுதாகரித்துக்கொண்டதுடன் சில விநாடிகள் அமர்ந்திருந்தவாறே பாதணிகளை அணிந்துகொண்டு எழுந்து உரையாற்ற ஆரம்பித்தார்.பாராளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்ட மேற்படி பிரேரணை மீது ஜனநாயக தேசிய கூட்டணி எம்.பி.யான அநுரகுமார திசாநாயக்க உரையாற்றியதன் பின்னர் ஆளும் கட்சி சார்பில் ஒதுக்கப்பட்ட நேரத்திலேயே பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் பெயர் அழைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

TELO Admin