Hot News
Home » செய்திகள் » ‘வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் வாக்காளராக பதிவு செய்யலாம்’

‘வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் வாக்காளராக பதிவு செய்யலாம்’

வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் எதிர்வரும் ஒக்டோபர் 31ஆம் திகதிக்கு முன்னர் உறவினர்கள் ஊடாக வாக்காளர் இடாப்பில் பதிவினை மேற்கொள்ளலாம் என யாழ். உதவி தேர்தல் ஆணையாளர் பொ.குகநாதன் இன்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.வாக்காளர் இடாப்பில் பதிவு செய்ய விரும்பவர்கள் இலங்கை குடியுரிமை பெற்றவர்களாக இருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.’2012ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் திருத்தம் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த திருத்தத்தின் போது இரட்டை பதிவு மேற்கொண்டிருந்த 6, 500 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். இதனாலேயே இறுதி பட்டியல் தயாரிப்பது பெரும் சிரமமாக உள்ளது’ எனவும் அவர் தெரிவித்தார்.’2012ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு சேர்க்கப்பட வேண்டியவர்கள் சேர்க்கப்பட்டும் நீக்கப்பட வேண்டியவர்கள் நீக்கப்பட்டும் கிராம அலுவலர் மற்றும் பிரதேச செயலகங்களில் மக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.இதில் உள்ள குறைபாடுகள் தொடர்பாக நேரடியாக பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை முன்வைக்க முடியும்’ என அவர் குறிப்பிட்டார்.

TELO Admin