Hot News
Home » செய்திகள் » திவிநெகுமவுக்கு எதிரான மாவை எம்.பி.யின் மனு மீது 22 ஆம் திகதி விசாரணை

திவிநெகுமவுக்கு எதிரான மாவை எம்.பி.யின் மனு மீது 22 ஆம் திகதி விசாரணை

திவிநெகும சட்ட மூலம் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கு உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தாக்கல் இம்மனு எதிர்வரும் 22 ஆம் திகதி விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. 5 நீதியரசர்கள் கொண்ட அமர்வின் முன் இந்த விசாரணை நடைபெறவுள்ளது.நேற்று நீதிமன்றத்தில் ஆஜரான சட்டத்தரணியும் எம்.பி.யுமான எம்.ஏ.சுமந்திரன் அங்கு திவிநெகும சட்ட மூலம் தொடர்பிலான கருத்துக்களை முன் வைத்தார்.வடக்கில் மாகாண சபை ஸ்தாபிக்கப்படாத நிலையில் மாகாண ஆளுநரின் அனுமதியை பெற்று இச்சட்ட மூலத்தை நிறைவேற்ற அரசாங்கம் தயாராகி வருவதாகவும் எனினும் அதற்கான அங்கீகாரத்தை வழங்க மாகாண ஆளுநருக்கு சட்டத்தில் அதிகாரம் இல்லை என்பதால் அதற்கு தடை விதித்து உத்தரவிடுமாறு கோரியும் இம்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதேவேளை “”திவிநெகும” (வாழ்வின் எழுச்சி) சட்ட மூலம் தொடர்பாக கலைக்கப்பட்டிருக்கும் மாகாண சபை சார்பில் கருத்து வெளிப்படுத்தும் ஆளுநரின் செயலானது சட்டவாக்கல் அதிகாரத்தை ஒரு நிறைவேற்று அதிகாரி பறித்தெடுக்கும் செயலாகவே அமையும் என மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் உயர் நீதிமன்றில் முறையிட்டிருக்கிறது.சர்ச்சைக்குரிய இந்தச் சட்ட மூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றின் சட்ட முடிவு கோரி தாக்கல் செய்திருக்கும் மனுவில் கருத்து வெளிப்படுத்தும் ஆளுநரின் செயலானது அவரது சட்ட அதிகாரத்திற்கு அப்பாற்பட்டது எனவும் மனுதாரர் வாதிடுகிறார்.ஆளுநர் ஒருவர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைவாகவே தனது தற்துணிபு செயற்பாட்டை மேற்கொள்வார் என்பதால் கலைக்கப்பட்டிருக்கும் ஒரு மாகாண சபையின் சார்பில் அதன் ஆளுநர் கருத்து வெளிப்படுத்துவதை அனுமதிப்பது அபாயகரமானது என அது சுட்டிக்காட்டுகிறது. மாகாண சபையொன்று கலைக்கப்பட்டிருக்கும் நிலையில் ஜனாதிபதியையோ அவரின் உத்தரவுக்கு அமைய செயல்படும் ஆளுநரையோ அனுமதிக்கும் வகையிலான அரசியலமைப்பு சட்ட வியாக்கியமானது மாகாண சபையொன்று கலைக்கப்பட்டிருக்கும் நிலையில் மாகாண சபை பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருக்கும் விடயங்கள் தொடர்பாக வீட்டோ அதிகாரத்திற்கோ அல்லது சட்டவாக்கல் ஒன்றை நிறைவேற்றுவதற்கோ வழி வகுத்து விடும் என அது கவலை தெரிவித்திருக்கிறது.

TELO Admin