Hot News
Home » செய்திகள் » வசந்தகுமார் தாக்கப்பட்டதற்கு எதிராக நல்லூர் பிரதேசசபை உறுப்பினர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.

வசந்தகுமார் தாக்கப்பட்டதற்கு எதிராக நல்லூர் பிரதேசசபை உறுப்பினர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.

நல்லூர் பிரதேச சபை தவிசாளர் ப.வசந்தகுமார் தாக்கப்பட்டதை கண்டித்து பிரதேச சபை உறுப்பினர்கள்  இன்று திங்கட்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர்.நல்லூர் பிரதேச சபைக்கு முன்பாக இவ் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதன்போது, பிரதேச சபையின் ஆளும் கட்சி உறுப்பினர்கள் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒன்றிணைந்து தவிசாளர் தாக்கப்பட்டதை கண்டித்து கண்டனத்தினையும் தெரிவித்துள்ளனர். ஆர்ப்பாட்டத்தின் போது, ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் நல்லூர் பிரதேச சபை எதிர்கட்சி தலைவரும் அமைப்பாளருமான  ரவீந்திரதாசன் தெரிவிக்கையில், ‘பிரச்சினைகளை பேசித் தீர்மானிக்க வேண்டியதுதான் குறிக்கோள். ஜனநாயக நாட்டில் வன்முறை ஆயுதக் கலாச்சாரத்தினால் ஜனநாயகத்தினை யாராலும் முறியடிக்க முடியாது.ஜனநாயக நாட்டில் இவ்வாறான சம்பவம் நடைபெறுவதும், நல்லூர் பிரதேச சபை தவிசாளர் தாக்கப்பட்டதும் ஏனைய  உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.இவ்விடயம் தொடர்பாக பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில முயற்சி அபிவிருத்தி அமைச்சருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.எதிர்காலத்தில் இதற்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்கப்பட வேண்டும். நாங்கள் தழிம் பேசும் சமூகங்கள். இவ்வாறான சம்வங்களை வன்மையாக கண்டிக்கின்றோம். அத்துடன் தமது கண்டனத்தினையும் தெரிவிக்கின்றோம்’ என்றார்.

TELO Admin