Hot News
Home » செய்திகள் » மாற்று சக்திகளுக்கு ஆசியா விளையாட்டு மைதானமல்ல: ஜனாதிபதி மஹிந்த

மாற்று சக்திகளுக்கு ஆசியா விளையாட்டு மைதானமல்ல: ஜனாதிபதி மஹிந்த

எங்கள் செல்வத்தையும் இயற்கை மற்றும் மனித வளங்களையும் எதிர்ப்பார்த்திருக்கும் மாற்று சக்திகளுக்கு ஆசியாக் கண்டமானது விளையாட்டு மைதானமாக ஒருபோதும் காணப்படாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஆசியா அதன் வலையத்தின் பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் செயற்படும். அது, பல எல்லைகளைக் கொண்டிருப்பது போல சவால்களுக்கும் முகங்கொடுத்துக்கொண்டிருக்கிறது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். நாங்கள் ஆசியாவின் விடியலுக்காக காத்திருக்கின்றோம். சர்வதேச சக்திகளின் தேவையற்ற தலையீடுகளுக்கு முகங்கொடுத்து ஆசியாவின் புதிய ஒளியாக திகழ்வதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். ஆசிய ஒத்துழைப்பு  உரையாடல் மாநாடு இன்று செவ்வாய்க்கிழமை குவைத்தில் ஆரம்பமாகியது. குவைத் அமீர் ஷெய்க் சபா அல் – அஹமட் அல் – ஜபார் அல் – சபா தலைமையில் ஆரம்பமான இந்த மாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

TELO Admin