Hot News
Home » செய்திகள் » இலங்கையை ஆதரிக்கக் கூடாது – மன்மோகன் சிங்குவுக்கு மீண்டும் கடிதம் எழுதினார் ஜெயலலிதா!

இலங்கையை ஆதரிக்கக் கூடாது – மன்மோகன் சிங்குவுக்கு மீண்டும் கடிதம் எழுதினார் ஜெயலலிதா!

ஈழத் தமிழர்களை படுகொலை செய்த இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவாகச் செயற்படக் கூடாது என தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா, இந்திய மத்திய அரசுசை, மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு கடிதம் ஒன்றை மீண்டும் எழுதியுள்ளார்.ஜெனிவா மனித உரிமைகள் கூட்டத் தொடரில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இலங்கை அரசுக்கு எதிராகக் கொண்டு வரவுள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும். என அவர் அக்கடிதத்தில் கெட்டுள்ளார்.அத்துடன், சர்வதேச நாடுகள் இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்றும் தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா இன்று பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். பிரதமரிடமிருந்து தனக்கு எந்தப் பதில்களும் வராத நிலையில் இந்தியா இலங்கைக்கு ஆதரவாக செயற்படப் போவதாக ஊடகங்களில் வெளிவந்த செய்திகள் தனக்கு கவலையளிப்பதாகவும், கடந்த சில நாட்களின் முன்பாக ஜெனிவா கூட்டத் தொடரில் இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என தான் எழுதிய கடிதத்தை மீண்டும் நினைவுபடுத்துவதாக தெரிவித்திருக்கிறார்.இலங்கையில் அப்பாவி ஈழத் தமிழர்களை ஈவ இரக்கமின்றி இலங்கை அரசு படுகொலை செய்துள்ளமையை சுட்டிக்காட்டியதுடன், தமிழ்நாடு சட்டமன்றத்தில் இலங்கை அரசுக்கு எதிராக போர்குற்ற விசாரணை நடத்த வேண்டும் எனவும் இலங்கையுடனான பொருளாதார உறவையும் துண்டிக்க வேண்டும் எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டமையையும் ஜெயலலிதா சுட்டிக்காட்டியுள்ளார்.அத்துடன் சிங்களவர்களுக்கு நிகராக தமிழர்களுக்கும் அரசியல் உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை பிரதமரிடம் நேரில் கேட்டுக் கொண்டதையும் நினைவுபடுத்தியுள்ள அவர் – ஈழத்தமிழர்கள் உரிமைகள் மற்றும் பாதுகாப்புத் தொடர்பில் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதங்களின் விபரங்கள் அனைத்தையும் நினைவுபடுத்தியும் உள்ளார்.

TELO Admin