Hot News
Home » செய்திகள் » இந்தியாவை உளவு பார்த்த இராஜதந்திரியை கொழும்பில் இருந்து திருப்பி அழைத்தது பாகிஸ்தான்

இந்தியாவை உளவு பார்த்த இராஜதந்திரியை கொழும்பில் இருந்து திருப்பி அழைத்தது பாகிஸ்தான்

கொழும்பில் உள்ள தூதரகத்தில் இருந்து இந்தியாவின் இராணுவ இலக்குகள் தொடர்பான உளவுத் தகவல்களைத் திரட்டி வந்ததாக குற்றச்சாட்டுக்குள்ளான இராஜதந்திரியை பாகிஸ்தான் திரும்ப அழைத்துள்ளது. ஏசியன் ஏஜ் ஊடகம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. அமீர் சுபைர் சித்திக் என்ற இராஜதந்திரி கொழும்பில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் இருந்து இந்தியா தொடர்பான உளவுத் தகவல்களைத் திரட்டி வந்தார். இவரால் பாகிஸ்தான் உளவுப்பிரிவான ஐஎஸ்ஐக்கு உளவு பார்க்கும் முகவராக உள்வாங்கப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த வெங்காய ஏற்றுமதியாளரான தமீம் அன்சாரி திருச்சியில் கைது செய்யப்பட்டிருந்தார். இதையடுத்து, இந்திய அதிகாரிகள் சிறிலங்கா அரசின் கவனத்துக்கு இந்த விவகாரத்தை எடுத்துச் சென்றிருந்தனர். இந்தநிலையிலேயே. குற்றச்சாட்டுக்கு உள்ளான பாகிஸ்தான் இராஜதந்திரி இஸ்லாமாபாத்திற்கு திருப்பி அழைக்கப்பட்டுள்ளார்.

TELO Admin