Hot News
Home » செய்திகள் » இலங்கை – இந்திய கூட்டு கடற்படை பயிற்சி

இலங்கை – இந்திய கூட்டு கடற்படை பயிற்சி

தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் இலங்கையுடனான இராணுவ உறவுகளை கடுமையாக எதிர்க்கும் நிலைமையில், இலங்கையுடனான கூட்டுப் பயிற்சிகளை நான்கு தென் மாநிலங்களிலிருந்து தூரமான இடத்தில் நடத்துமாறு இந்திய கடற்படைக்கு இந்திய பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது. ஸ்லினெக்ஸ் என்னும் குறியீட்டு பெயர் கொண்ட பயிற்சித் தொடரின் கீழ் ஏற்கனவே இரண்டு பயிற்சிகள் திருகோணமலை கரை வழியே நடைபெற்றுள்ளது. இனிமேல், இலங்கையுடனான இந்த கடற்படை பயிற்சிகளை தமிழ்நாடு, ஆந்திரா பிரதேசம், கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களின் கரையிலிருந்து வெகு தூரத்தில் நடத்துமாறு இந்திய பாதுகாப்பு அமைச்சு ஆலோசனை கூறியுள்ளதாக இந்திய கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த பயிற்சிகள் தொடர்பில் காணப்படும் உணர்வுகள், எதிர்ப்புகளை கருத்திற்கொண்டே பாதகாப்பு அமைச்சு இந்த ஆலோசனையை கூறியிருக்கலாம் என அவர் குறிப்பிட்டார். இலங்கையுடன் பாதுகாப்பு உறவுகள் இருப்பதை தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் எதிர்த்து வருகின்றன. இருப்பினும் இலங்கை பாதுகாப்பு அதிகாரிகளுக்கு பயிற்சி அளிப்பதை தொடர இந்திய பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

TELO Admin