Hot News
Home » செய்திகள் » இலங்கை- சீனாவிற்கிடையில் உத்தியோகபூர்வ விமான சேவை ஆரம்பம்

இலங்கை- சீனாவிற்கிடையில் உத்தியோகபூர்வ விமான சேவை ஆரம்பம்

சீனாவின் விமான சேவை நிறுவனம் எதிர்வரும் 10 ஆம் திகதி இலங்கைக்கான தனது உத்தியோகபூர்வ சேவையை ஆரம்பிக்க உள்ளது.

எயார் சைனா விமான சேவையின் சீ.ஏ.425 இலக்க விமானம் சீனாவின் சேங்க்து விமானத்தில் இருந்து புறப்பட்டு எதிர்வரும் 10 ஆம் திகதி இரவு 9.50 கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க உள்ளது.

இதனையடுத்து 10 ஆம் திகதி முதல் வாரம் தோறும் எயார் சைனா விமான சேவை நிறுவனம் இலங்கைக்கான 4 விமான சேவைகளை நடத்த உள்ளது.

எயார் சைனா விமான சேவையானது மக்கள் சீன அரசின் தேசிய விமான சேவையாகும்.

எயார் சைனா விமான இலங்கைக்கான சேவை ஆரம்பிப்பதை முன்னிட்டு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைபவம் ஒன்று நடைபெறவுள்ளதுடன் அதில் சீன பிரதிநிதிகளும், இலங்கையின் துறைமுகம் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவும் கலந்து கொள்ள உள்ளனர்

TELO Media Team 1