Hot News
Home » செய்திகள் » கிளிநொச்சி மாவட்ட நன்னீர் மீன்பிடியாளர் சங்கங்களுக்கு வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சால் உதவித்திட்டம்

கிளிநொச்சி மாவட்ட நன்னீர் மீன்பிடியாளர் சங்கங்களுக்கு வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சால் உதவித்திட்டம்

கிளிநொச்சி மாவட்ட நன்னீர் மீன்பிடியாளர் சங்கங்களுக்கு வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சால் உதவித்திட்டம் – மானிய அடிப்படையிலான மீன்பிடி வலைகள் வழங்கிவைப்பு ….
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள நன்னீர் மீன்பிடி சங்கங்களில்  தேசிய நீரியல் வளங்கள்  அதிகாரசபையால் தெரிவுசெய்யப்பட்ட 02 சங்கங்களுக்கு மானிய அடிப்படையில் மீன்பிடி வலைகள் வழங்கும் நிகழ்வு  வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சால் 29-05-2015 வெள்ளி மாலை 3:00 மணியளவில் கிளிநொச்சி தேசிய நீரியல் வளங்கள் அதிகார சபையின் காரியாலயத்தில்   இடம்பெற்றது.
நிகழ்விற்கு வடக்கு மாகாண மீன்பிடி போக்குவரத்து அமைச்சின் செயலாளர் திரு.எஸ்.சத்தியசீலன் அவர்களும் வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சரின் இணைப்பு செயலாளர் திரு.ப.ஜெரோம் எமிலியானுஸ்பிள்ளை, தேசிய நீரியல் வளங்கள்  அதிகார சபையின் மாவட்ட விரிவாக்கல் அதிகாரி திரு.எஸ்.சலீபன் ஆகியோரும் கலந்து நன்னீர் மீன்பிடியாளர்களுக்கு பொருட்களை வழங்கி வைத்தனர் அத்தோடு  பிரதேச செயலக வாரியாக மீன்பிடியாளர்களின் பிரச்சினைகள் தேவைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது,  மீன்குஞ்சுகள் வைப்பிலிடல் தொடர்பாகவும், எவ்வாறான மீன்குஞ்சுகள் வைப்பிலிடல் போன்ற விடயங்களை அமைச்சருக்கோ அல்லது தனக்கோ  தெரியப்படுத்தும்  பட்சத்தில் அவ் வேலைத்திட்டங்களை நடாத்த தாம் உடன் நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
TELO Media Team 1