சர்வதேச விசாரணைக்கு அலி சப்ரி தயாரா – ரெலோ சவால்

காணாமல் ஆக்கபட்டோர் எத்தனை பேர் என்ற வாய்க் கணக்குகளை சொல்வதை விடுத்து சர்வதேச விசாரணை நடத்துவதன் மூலமாகவே சரியான கணக்கினை அறிந்து கொள்ள முடியும். அப்பொழுதுதான் யார் பொய் சொல்லுகிறார்கள் யார் உண்மை சொல்லுகிறார்கள் என்பது வெளிவரும். அதை அனைவரும் ஏற்றுக் கொள்ளவும் முடியும். அதை விடுத்து காலத்துக்கு காலம் வெளிவிவகார அமைச்சர்களாக வருபவர்கள் தங்கள் மனக்கணக்குகளின் படி காணாமல் ஆக்கப்பட்டோரின் எண்ணிக்கையை கூறுவது அபத்தமாகும் என ரெலோவின் ஊடகப் பேச்சாளர் சுரேன் குருசாமி தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

சர்வதேச பிரதிநிதிகளால் வெளியிடப்பட்ட அறிக்கைகளில் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம், காணாமல் ஆக்கப்பட்டு இருக்கலாம் என்று சனத்தொகை மதிப்பீட்டின் அடிப்படையில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த உண்மையை கண்டறிவது அரசினுடைய கடமை. அதற்கான நியாயபூர்வமான விசாரணையை நடத்துவதும் அரசின் கடமை. உள்ளூர் விசாரணைகளின் மூலம் நீ பொய் சொல்லுகிறாய், நான் பொய் சொல்லுகிறேன் என்று ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டிருப்பதனால் தான் சர்வதேச விசாரணை கோரப்படுகிறது. சர்வதேச விசாரணையின் மூலமே சரியான தரவுகளையும், காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய ஏற்றுக்கொள்ள ப்படக்கூடிய எண்ணிக்கையும் அறிந்து கொள்ள முடியும்.

இதனால் தான் நாம் சர்வதேச விசாரணையை கோருவதோடு ஐநா மனித உரிமை உயர் ஸ்தானிகரும் மனித உரிமை பேரவையும் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி நிற்கின்றனர்.

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியினுடைய கருத்தும் சர்வதேச விசாரணையை கோருவதே சாலச் சிறந்தது என்று தெளிவாக வெளிப்படுத்தி நிற்கிறது. அவர் கூறும் எண்ணிக்களை தமிழ் மக்களோ சர்வதேச பொறிமுறைகளோ ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்பதையும் வெளிவிவகார அமைச்சர் புரிந்து கொள்ள வேண்டும்.

காலத்துக்கு காலம் வாய் கணக்குகளை வெளியிடுவதை விடுத்து இம்முறை ஐநா மனித உரிமைப் பேரவையில் எதிர்கொள்ள இருக்கும் பிரேரணைக்கு இணைய அனுசரணை வழங்கி சர்வதேச விசாரணை மூலமாக பொறுப்பு கூறல் நல்லிணக்கத்திற்கு அரசு தயாராக வேண்டுமே தவிர இந்த மாதிரியான கருத்துக்கள் எந்த முடிவுக்கும் இட்டுச் செல்லாது.

சரியான கணக்குகளை அறிந்து கொள்ள அமைச்சர் அலி சப்ரி அவர்கள் சர்வதேச விசாரணைக்கு தயாரா? என்பதற்கு அவர் பதில் கூற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் கைது!

சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி – தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தர்மபுரம் பகுதியில் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக குளக்கரை ஒன்றில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடமிருந்து கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் 2613 லீட்டர் கோடாவும், 24 லீட்டர் கசிப்பும் பொலிசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த சந்தேக நபரை இன்றைய தினம் 04.09.2024 கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.எம்.சதுரங்க தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

யாழில் மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய ஆசிரியர் கைது!

யாழ்ப்பாணம், இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியவிளான் பகுதியில் 10 வயது மகளை பல நாட்களாக பாலியல் ரீதியாக தொந்தரவு செய்த தந்தை ஒருவர் இன்றையதினம் இளவாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் பண்ணாகம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தனது மகளை பல நாட்களாக பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார்.
அந்தவகையில் இது குறித்து இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில் குறித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மாதகல் கடலில் படகு கவிழ்ந்து விபத்து – ஒருவரை காணவில்லை!

இன்று அதிகாலை மாதகலில் இருந்து கடற்றொழிலுக்கு சென்ற இளைஞர்கள் பயணித்த படகு நீரில் மூழ்கி விபத்துக்குள்ளானது. இந்நிலையில் ஒருவர் பாதுகாப்பாக கரை சேர்ந்துள்ளதுடன் மற்றையவர் காணாமல் போயுள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
இரண்டு இளைஞர்கள் இவ்வாறு கடற்றொழிலுக்கு சென்றுள்ளனர். அவர்கள் பயணித்த படகு திடீரென விபத்துக்குள்ளானது. இந்நிலையில் படகில் பயணித்த ஒருவர் நீந்திக்கொண்டிருந்த வேளை அருகே வந்த படகின் உதவியுடன் காப்பாற்றப்பட்டுள்ளார். மற்றைய இளைஞர் காணாமல் போயுள்ளார்.
நாகராசா பகீரதன் என்ற 21 வயது இளைஞனே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
அவரை தேடும் நடவடிக்கைகளில் கடற்படையினரும் மீனவர்களும் இணைந்து ஈடுபட்டு வருகின்றனர்.
Posted in Uncategorized

வட்டுக்கோட்டை சந்திக்கு அருகாமையில் விபத்து – முதியவர் வைத்தியசாலையில் அனுமதிப்பு!

இன்று காலை வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டுக்கோட்டை சந்தியில் இருந்து சித்தங்கேணி செல்கிற பக்கமாக அண்ணளவாக 150 மீற்றர்கள் தூரத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் முதியவர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வீதியில் பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று, குறித்த இடத்தில் வலது பக்கத்தில் உள்ள கிளை வீதிக்கு திரும்ப முற்பட்ட வேளை அதே திசையில் பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்து சம்பவித்துள்ளது.

இதன்போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிளின் சாரதியும், அவருக்கு பின்னால் அமர்ந்திருந்து தலைக்கவசம் இன்றி பயணித்த முதியவரும் காயமடைந்தனர். முதியவர் சம்பவ இடத்தில் மயக்கமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்து சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Posted in Uncategorized

வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும் பணிகள் ஆரம்பம்!

எதிர்வரும் 21ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. அந்தவகையில் வாக்காள அட்டைகள் தயாரிக்கும் பணிகள் யாவும் நிறைவடைந்துள்ளன.

இந்நிலையில் வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும் பணிகள் இன்று நாடுபூராகவும் ஆரம்பமாகின.

அந்தவகையில் கிளிநொச்சி மாவட்டத்திலும் தபால் ஊழியர்களால் வாக்காளர் அட்டைகளை வீடுவீடாக சென்று விநியோகிக்கப்படுகிறது.

Posted in Uncategorized

பொதுமகனிடம் கையூடு வாங்க முற்பட்ட இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இடைநிறுத்தம்!

பொதுமகனிடம் கையூட்டு வாங்க முற்பட்ட இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

நேற்றையதினம் கிளிநொச்சி விவேகானந்தா நகர் பகுதியைச் சேர்ந்த நபர் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு அமைவாக விசாரணை மேற்கொண்ட கிளிநொச்சி பொலிஸ் அத்தியட்சகர் இவ்வாறு இருவரையும் பணியிலிருந்து இடைநிறுத்தியுள்ளார்.

குறித்த பொதுமகனிடமிருந்து 5000 ரூபா பணம் பெற இருவரும் முயற்சித்துள்ளனர். இது தொடர்பாக விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறும், குறித்த இருவரையும் நேற்று முதல் பணியிலிருந்து இடைநிறுத்துமாறும் பொலிஸ் அத்தியட்சகர் உதவி பொலிஸ் அத்தியட்சகருக்கு உத்தரவிட்டுள்ளார்.

குறித்த இருவரும் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுபவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

அஞ்சல் வாக்களிப்பில் தமிழர் பொதுச் சின்னத்திற்கு வாக்களியுங்கள் – முன்னாள் தவிசாளர் நிரோஸ் வேண்டுகோள்!

ஜதிபதித் தேர்தலுக்கான அஞ்சல் வாக்களிப்பு நாளை முதல் ஆரம்பமாகவுள்ள நிலையில் வாக்களிக்கவுள்ள அரச உத்தியோகத்தர்கள் தமிழ் மக்களின் பொதுச் சின்னமாகவுள்ள சங்கு சின்னத்திற்கு வாக்களித்து எமது மக்கள் சார்ந்து எமக்குள்ள தேசிய உணர்வையும் பொறுப்பினையும் வெளிப்படுத்த வேண்டும் என முன்னாள் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளரும் ரெலோவின் தலைமைக்குழு உறுப்பினருமான தியாகராஜா நிரோஸ் தெரிவித்தார்.

நேற்றையதினம் (திங்கட்கிழமை) கோப்பாய் பகுதியில் அரச சேவையாளர்களை நோக்கிய பிரச்சார நடவடிக்கைகளின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், அரச சேவையில் எமது மக்களுக்கான பணிகளை அர்ப்பணிப்புடன் எமது சகோதரர்கள் ஆற்றி வருகின்றீர்கள். அரச சேவையில் பல்வேறுபட்ட நெருக்கடிகள் இன ரீதியிலும் அரசியல் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டும் இன்றும் காணப்படுகின்றன. அரச சேவையாளர்கள் பல்வேறுபட்ட சந்தர்ப்பங்களில் இன ரீதியில் பழிவாங்கப்பட்டுள்ளீர்கள். தனிச்சிங்களச் சட்டம் கொண்டுவரப்பட்டமை நாட்டின் இன முரண்பாடுகளுக்கு பிரதான அடிப்படைகளில் ஒன்றாகக் காணப்படுகின்றது என்றால் அச் சட்டத்தின் காரணமான மிகவும் பாதிக்கப்பட்ட தரப்பினுள் அரச சேவையாளர்கள் உள்ளடங்கினீர்கள்.

பல்கலைக்கழக தரப்படுத்தல்இ அரச சேவையில் சிங்கள மயப்படுத்தல்இ அரச சேவையினை இராணுவ மயப்படுத்தல்இ அரசியல்கட்சி மயப்படுத்தல் என குறிப்பாக வடக்கக் கிழக்கில் பணியாற்றும் நீங்கள் இனரீதியாக மாறி மாறி ஆட்சிக்குவந்த அரசாங்கங்களால் பாதிக்கப்பட்டீர்கள். தற்போது அவை நேரடியாகப் தெரியக்கூடியதாக பிரயோகிக்கப்படவில்லை ஆயினும் மறைமுகமாக இன ரீதியிலான புறந்தள்ளல்கள் இலங்கையின் நிர்வாகசேவைக்கட்டமைப்புஇ இதர சேவைக்கட்டமைப்புக்களில் தொடர்ந்த வண்ணமே உள்ளன. இவ்விடயங்கள் எல்லாம் தமிழ் மக்களுக்கு எமது அரசியல் அபிலாசைகளைப் பிரயோகிக்கத்தக்க  நிரந்தர அரசியல் தீர்வு கிட்டும் வரையில் தொடர்கதையாகக் காணப்படும் என்பதுவே உண்மை. இந் நிலையில் எமக்கும் பிரச்சினைகள் உண்டு என்பதை இரகசியமாக வாக்களித்து ஒடுக்குமுறையை வெளிப்படுத்துங்கள்.

தமிழ் பொதுவேட்பாளர் என்பது நாட்டினுள் இன நல்லிணக்கத்தினைத் துண்டாடுவதற்கானதல்ல. மாறாக எங்களுக்குப் பிரச்சினைகள் இருக்கின்றன என்பதை வெளிக்காட்டுவதற்கானது. இது ஜனநாயக ரீதியில் சர்வதேசம் ஏற்றுக்கொண்ட உரிமைசார் நடவடிக்கையுமாகும் என்பதை புரிந்து கொண்டு அரச உத்தியோகத்தர்கள்தமிழ் மக்களின் பொதுச் சின்னமான சங்குச் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைமைக்குழு உறுப்பினருமான தியாகராஜா நிரோஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.