நிதி மோசடி வழக்கில் சிக்கிய இராஜாங்க அமைச்சர் : குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை

இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவிடம் நீர்கொழும்பு பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஐந்து மணித்தியாலங்களுக்கு மேலாக விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.

1 கோடி ரூபா நிதி மோசடி நடைபெற்ற குற்றச்சாட்டு தொடர்பிலேயே நேற்று அவரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

பெண்ணொருவரை அவுஸ்திரேலியாவில் வாழ அனுப்புவதாக வாக்குறுதியளித்து அமைச்சரின் செயலாளர் ஒருவர் இந்தத் தொகையைப் பெற்றதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி பொலிஸாரின் விசாரணையில், குறித்த பெண்ணிடம் இருந்து ஒருங்கிணைப்பு செயலாளர் பணத்தை பெற்றுக்கொண்டு அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவின் இரண்டு கணக்குகளுக்கு மாற்றியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன்படி, அந்த வங்கிக் கணக்குகளுக்கு பணம் மாற்றப்பட்டது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.

மேலும், அந்த பெண்ணை விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்று அனுப்பிவைத்ததாகவும், முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

மாவை சேனாதிராஜாவின் மகன் அரியநேந்திரனுக்கு ஆதரவு கோரி பரப்புரையில்!

இலங்கை தமிழரசு கட்சி சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவளிக்கும் என்று தீர்மானம் எடுத்துள்ளது.

இந்த சூழ்நிலையில் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவினுடைய மகனும், தமிழரசு கட்சியின் இளைஞர் அணி முன்னாள் செயலாளருமான கலையமுதன் இன்றையதினம் தமிழ் தேசிய பொது கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் அரியனேந்திரன் அவர்களுக்கு ஆதரவு கோரி பரப்புரையில் ஈடுபட்டார்.

வலி வடக்கின் பல்வேறு கிராமங்களிலும் பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கஜதீன் ஆகியோருடன் இணைந்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

 

Posted in Uncategorized

தமிழர்களை இளிச்ச வாயர்கள் என நினைக்கிறாரா அநுர – சபா குகதாஸ் சீற்றம்!

தமிழ் இனப் படுகொலைக்கான சர்வதேச விசாரணையை கோரி நிற்கும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களைப் பார்த்து உள் நாட்டு நீதிமன்றத்தில் போர்க் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்கப்படும் என யாழ்ப்பாணத்தில் தேர்தல் பிரசார கூட்டத்தில் கூறிய தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார தமிழர்களை இளிச்சவாயர்கள் என்று நினைத்து கதை அளந்துவிட்டு சென்றுள்ளார் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் கடுமையாக சாடியுள்ளார்.
இன்று அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இனப்படுகொலைக்கு உடந்தையாக இருந்தவர்கள் இராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு செய்து இறுதிப் போரிலும் முள்ளிவாய்க்காலில் லட்சக்கணக்காண தமிழ் மக்கள் கொல்லப்பட காரணமானவர்கள் ராஜபக்சாக்களின் வேட்டிக்குள் மறைந்திருந்தவர்கள் இன்று போர்க்குற்றவாளிகளை விசாரிப்பதாக கூறுவது வேடிக்கையாக உள்ளது.
எய்தவனை நோவதா? இல்லை அம்பை நோவதா? என்றால்  எய்தவன் தான் குற்றவாளி ஆகவே அநுரகுமார போன்றோர் எய்தவர்கள் என்றால் கள்ளனே கள்ளனை விசாரிப்பதா?
தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட இனப்படுகொலைக்கும் போர்க் குற்றங்களுக்குமான நியாயமான விசாரணையை மேற் கொள்வதற்கு உரிய சட்ட வரைபுகள் இலங்கை நீதித்துறையின்  குற்றவியல் சட்டக் கோவையில் இல்லை. அத்துடன் குற்றம் இழைத்த தரப்பே விசாரிப்பது என்பது மிக மிக வேடிக்கையான விடையம் உலகில் அப்படி நடந்ததாக வரலாறு இல்லை.
எனவே கடந்தகால ஆட்சியாளர்கள் போல அநுரகுமார வார்த்தைகளால் தமிழ் மக்களை ஏமாற்றி வாக்குப் பெற கற்பனையில் மனப்பால் குடிக்கின்றார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழில் ரிக்ரொக் மூலம் 45 இலட்சம் ரூபா மோசடி!

இளம் பெண்ணின் ரிக்ரொக் வீடியோக்களைப் பார்த்து ஏமாந்த 52 வயதுடைய ஒருவர் 45 இலட்சம் ரூபாவைப் பறிகொடுத்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் நடந்துள்ளது. இந்த மோசடிச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் விசேட குற்ற விசாரணைப் பிரிவுப் பொலிஸாரால் மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவர் தற்போது சுவிஸ் நாட்டில் வசிக்கின்றார். 52 வயதாகும் அவர் ரிக்ரொக்கில் நேரத்தைச் செலவிடுவது வழமை. இந்தநிலையில் ரிக்ரொக்கில் உள்ள சுமார் 25 வயதுடைய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவரின் பெயரில் அவருடைய வட்ஸ் அப் கணக்குக்கு ரிக்ரொக் வீடியோக்கள் அனுப்பட்டுள்ளன. அதையடுத்து அவர்கள் இருவரும் தொடர்பாடல்களை ஆரம்பித்துள்ளனர்.
ரிக்ரொக் கணக்கில் பதி வேற்றப்பட்ட படங்களும் சுவிஸில் உள்ள வருக்கு அனுப்பப்பட்டுள்ளன. அவரும் தனது படங்களைப் பரிமாறிக்கொண்டுள்ளார்.
இந்தத் தொடர்பாடல் இறுக்கமடைந்த பின்னர், அந்தப்பெண்பல்வேறு தேவை களைக் கூறி சுவிஸில் உள்ளவரிடம் பணம் பெற்றிருக்கின்றார். ரிக்ரொக் கணக்கு உள்ள அதே பெயரைக்கொண்ட வங்கிக் கணக்குக்கே இந்தப் பணப் பரி மாற்றம் நடந்திருக்கின்றது. சுவிஸில் உள்ளவரும் சுமார் 47 இலட்சம் ரூபாவ ரையில் கொடுத்திருக்கின்றார். அதன் பின்னர் அந்தப் பெண்ணின் தொடர்பா டல்கள் குறைய ஆரம்பித்துள்ளன. ஒரு கட்டத்தில் சுவிஸில் உள்ளவருக்கு சந் தேகம் ஏற்பட. அவர் யாழ்ப்பாணம் வந்து யாழ்ப்பாணம் விசேட குற்ற விசாரணைப் பிரிவுப் பொலிஸாரிடம் முறைப் பாடு ஒன்றைச் செய்திருக்கின்றார்.
யாழ்ப்பாணம் விசேட குற்ற விசாரணைப் பிரிவுப் பொலிஸ் பொறுப்பதிகாரி குணறோஜன் தலைமையிலான பொலிஸ் குழு இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்தது. விசாரணையில் கண்டுபி டிக்கப்பட்ட தகவல்கள் அதிர்ச்சியளிப்பவையாக இருந்தன.
விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் ரிக்ரொக்கில் உள்ள பெண்ணைக் கண்டுபிடித்து அவரிடம் விசாரணையை முன்னெடுத்தனர். விசாரணையில் அவருக்கும் இந்தச் சம்பவத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது தெரியவந்திருக்கின்றது. அதையடுத்து வங்கிக் கணக்கு இலக்கத்தை வைத்து விசார ணைகளை முன்னெடுத்த பொலிஸார் அரியாலையைச் சேர்ந்த பெண் ஒருவ ரைக் கைது செய்தனர். அந்தப் பெண்ணின் பெயரும், முதலெழுத்தும் ரிக்ரொக் கணக்கு வைத்திருக்கும் இளம்பெண்ணின் பெயர் முதலெழுத்தும் ஒன்றாக இருந்தன.
அவரது வங்கிக்கணக்குக்கே பணம் மாற்றப்பட்டுள்ளபோதும், சுவிஸ் நாட்டில் உள்ளவருடன் தொடர்பாடலை மேற்கொண்டவர் அவர் இல்லை என்பது விசாரணைகளில் கண்டறியப்பட்டது.
தொடர் விசாரணையில் 47 வயதுடைய மற்றொரு பெண் கைது செய்யப்பட்டார். அவரே சுவிஸ் நாட்டில் உள்ளவருடன் இளம் பெண் போன்று உரையாடிப் பணத்தைக் கறந்திருப்பது விசாரணைகளில் தெரியவந்தது. அத்துடன், இவர் களின் அன்ரி’ என்று அடையாளப்படுத் தப்பட்ட இன்னொருவருக்கும் பணம் அனுப்பப்பட்டுள்ளது. அவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட மூன்று பெண்களும் ஒருவருக்கொருவர் தெரிந்தவர்கள். ரிக்ரொக் பெண்ணின் பெயரும், தனது நண்பியின் பெயரும் ஒன்றாக இருப்பதைப் பயன்படுத்தி 47 வயதுப் பெண் இந்தத் திட்டத்தைத் தீட்டியுள்ளார். சுவிஸ் நாட்டில் உள்ளவர் முன்னொரு தடவை யாழ்ப்பாணம் வந்தபோது கிடைத்த அறிமுகத்தைக் கொண்டே அந்தப் பெண் திட்டம் தீட்டிப் பணத்தை கறந்துள் ளமையும் விசாரணையில் கண்டறியப் பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டபோது. பணத்தை மீள வழங்குவதற்குச் சம்மதம் தெரிவித்துள்ளனர். அதையடுத்து அவர் களைப் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதியளித்தது.
Posted in Uncategorized

என்னை கருணைக் கொலை செய்யுங்கள் – யாழில் முதியவரின் உருக்கமான கோரிக்கை!

நோய் வாய்ப்பட்டு ஒரு காலை இழந்து, எந்தவொரு முதியோர் இல்லத்தாலும் பொறுப்பேற்கப்படாத நிலையில் உள்ள என்னை, குறைந்த பட்சம் கருணைக் கொலையாவது செய்யவேண்டும் என்று முதியவர் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இளையதம்பி ஜெயக்குமார் என்ற அந்த முதியவர் தற்போது, மானிப்பாய் வீதியில் உள்ள உதயதாரகை சன சமூக நிலையத்தில் தஞ்சமடைந்துள் ளார். ஒரு காலில்லாத நிலையில் உள்ள அவரைப் பொறுப்பேற்பதற்கு எந்தவொரு முதியோர் இல்லங்களும் இதுவரை முன் வரவில்லை.
இதையடுத்து, கிராம மக் கள் இணைந்து கிராம அலுவலருக்கு எழுதிய கடிதத்தின் விளைவாகவும், தொடர் நடவடிக்கைகள் காரணமாகவும் அந்த முதியவரை, பொருத்தமான முதியோர் இல்லத்தில் சேர்க்கவேண்டும் என்று ஜே/88 கிராம அலுவலர் பிரிவின் கிராம அலுவலர் சிபாரிசு செய்திருந்தார்.
எனினும், எந்தவொரு முதியோர் இல்லங்களும் அவரைப் பொறுப்பேற்க முன்வராததைத் தொடர்ந்து, இந்த விடயம் தொடர்பில் யாழ்ப்பாணம் பிரதேச செயலர் எஸ்.சுதர்சனின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. அவர் பளை யிலுள்ள முதியோர் இல்லத்தில் அந்த முதியவரை இணைத்துக் கொள்ளுமாறு கடிதம் வழங்கியுள்ளார்.
நீண்ட நாள்களாக அல்லலுற்றுக் கொண்டிருந்த முதியவருக்கு தங்க ஓரிடம் கிடைத்தமையே போதும் என்ற நிலையில், கிராம மக்கள் இணைந்தும் பெரும் நிதிச் செலவில் அந்த முதியவரை பளையிலுள்ள மேற்படி முதியோர் இல்லத்துக்குக் கொண்டுசென்றனர். எனினும், அங்கும் அவருக்கு இடம் வழங்கப்படாததையடுத்து, அவர் மீண்டும் மீண்டும் உதய தாரகை சனசமூக நிலையத்தில் தஞ்ச மடைந்துள்ளார்.
இதையடுத்தே அவர், எந்தவொரு முதி யோர் இல்லங்களோ, அமைப்புகளோ அல்லது நிறுவனங்களோ பொறுப்பேற்காத பட்சத்தில் குறைந்தபட்சம் தன்னைக் கருணைக் கொலையாவது செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
தனது கடிதத்தின் பிரதிகளை அவர், வடக்கு மாகாண ஆளுநருக்கும். யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பணிப்பாளருக்கும், கொட்டடி கிராம அலுவலருக்கும் அனுப்பி வைத்துள்ளார்.
Posted in Uncategorized

யாழில் மந்த கதியில் இடம்பெற்ற அஞ்சல் வாக்களிப்பு!

இலங்கையில் நடக்கவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நேற்று (04) உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகியுள்ளது.
மாவட்ட செயலக அலுவலகங்கள், தேர்தல் ஆணைய அலுவலகங்கள், மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகங்கள், பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகங்கள், காவல் நிலையங்கள், சிறப்பு அதிரடிப்படை முகாம்கள், சிறப்பு காவல் பிரிவுகள் மற்றும் விஐபிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தபால் மூலம் வாக்களிக்க முடியும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அந்தவகையில் யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியில் அமைக்கப்பெற்றுள்ள வாக்களிப்பு நிலையத்தில் இன்றையதினம் ஆசிரியர்களுக்கான அஞ்சல் வாக்களிப்பு நிகழ்வு இடம்பெற்றது.
காலை வேளை குறைந்த அளவு வாக்காளர்களே வாக்களிக்க அங்கு வருகை தந்ததை அவதானிக்க முடிந்தது.
Posted in Uncategorized

மாதகல் கடலில் காணாமல் போன இளைஞனின் சடலம் மீட்பு!

நேற்று அதிகாலை மாதகலில் இருந்து கடற்றொழிலுக்கு சென்ற இளைஞர்கள் பயணித்த படகு நீரில் மூழ்கி விபத்துக்குள்ளானது. இந்நிலையில் ஒருவர் பாதுகாப்பாக கரை சேர்ந்துள்ளதுடன் மற்றையவர் காணாமல் போயுள்ளார். இவ்வாறு காணாமல் போனவரின் சடலம் இன்று காலை கரையொதுங்கியது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
இரண்டு இளைஞர்கள் நேற்று அதிகாலை இவ்வாறு கடற்றொழிலுக்கு சென்றுள்ளனர். அவர்கள் பயணித்த படகு திடீரென விபத்துக்குள்ளானது. இந்நிலையில் படகில் பயணித்த ஒருவர் நீந்திக்கொண்டிருந்த வேளை அருகே வந்த படகின் உதவியுடன் காப்பாற்றப்பட்டுள்ளார். மற்றைய இளைஞர் காணாமல் போனார். இவ்வாறு காணாமல் போனவரின் சடலம் இன்று கரையொதுங்கியது.
மாதகல் பகுதியை சேர்ந்த நாகராஜா பகீரதன் என்ற 21 வயதுடைய இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
Posted in Uncategorized

சஜித்தின் பிரச்சார மேடையில் புறக்கணிக்கப்பட்ட மதத் தலைவர்கள்!

வவுனியாவில் இடம்பெற்ற ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பௌத்த, இந்து, கிறிஸ்தவ மத குருமார் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.

ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவினது தேர்தல் பரப்புரைக் கூட்டம் நேற்று (03) வவுனியா யங்ஸ்ரார் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

குறித்த கூட்டத்தின் பிரதான மேடையில் மதத்தலைவர்ககளுக்கும் இடம் ஒதுக்கப்பட்டு அவர்களும் அமர்ந்திருந்தனர்.

பொதுக் கூட்டத்தில் மூவினங்களையும் சேர்ந்த நான்கு மதங்களையும் சேர்ந்த மக்கள் கலந்து கொண்ட போதும் பௌத்த மதகுரு, இந்து மதகுரு, கிறிஸ்தவ மதகுரு ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.அவர்கள் எவரும் பிரதான மேடையில் காணப்படவில்லை.

இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த 6 மௌலவிகள் வரவழைக்கப்பட்டு அவர்கள் மதத்தலைவர்கள் அமரும் இடத்தில் இருந்ததுடன், ஒரு மௌலவி உரையாற்றியும் இருந்தார்.

ஆனால் ஏனைய மதத் தலைவர்கள் அழைக்கப்படவில்லை என அங்கு கலந்து கொண்டு ஏனைய மதங்களைச் சேர்ந்த மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

Posted in Uncategorized

சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் கைது!

சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி – தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தர்மபுரம் பகுதியில் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக குளக்கரை ஒன்றில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடமிருந்து கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் 2613 லீட்டர் கோடாவும், 24 லீட்டர் கசிப்பும் பொலிசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த சந்தேக நபரை இன்றைய தினம் 04.09.2024 கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.எம்.சதுரங்க தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

யாழில் மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய ஆசிரியர் கைது!

யாழ்ப்பாணம், இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியவிளான் பகுதியில் 10 வயது மகளை பல நாட்களாக பாலியல் ரீதியாக தொந்தரவு செய்த தந்தை ஒருவர் இன்றையதினம் இளவாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் பண்ணாகம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தனது மகளை பல நாட்களாக பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார்.
அந்தவகையில் இது குறித்து இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில் குறித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Posted in Uncategorized