Hot News
Home » செய்திகள் » இலங்கைக்கு அமரிக்கா மீண்டு;ம் எச்சரிக்கை

இலங்கைக்கு அமரிக்கா மீண்டு;ம் எச்சரிக்கை

க்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் யோசனைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அமரிக்கா கவனமாக அவதானித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இலங்கை அரசாங்கம் நல்லிணக்க நடவடிக்கை தொடர்பில் உரிய முனைப்புக்களை மேற்கொள்ளாது போனால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அந்த அரசாங்கத்துக்கு எதிராக எடுக்கப்போகும் நடவடிக்கை குறித்து ஆராயவுள்ளதாகவும் அமரிக்கா குறிப்பிட்டுள்ளது

நியூயோhக்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்துரைத்த ஐக்கிய நாடுகளுக்கான அமரிக்காவின் போர்க்குற்றங்களுக்கான தூதுவர் ஸ்டீபன் ஜே ரெப் இதனை தெரிவித்தார்.

அத்துடன் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கைக்கு விஜயம் செய்து நிலைமைகளை அவதானிக்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்

இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் கடந்த இரண்டு ஆண்டுகளாக அமரிக்கா இரண்டு யோசனைகளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் முன்வைத்தது

இந்தநிலையில் அது பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது

எனினும் குறித்த யோசனைகளையும் கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் யோசனைகளையும் இலங்கை நடைமுறைப்படுத்தாமை குறித்து அமரிக்கா தமது வருத்தத்தை தெரிவிப்பதாகவும் ஸ்டீபன் ரெப் குறிப்பிட்டார்

TELO Media Team 1