Hot News
Home » செய்திகள் » சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஜனாதிபதியிடம் கடிதம்

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஜனாதிபதியிடம் கடிதம்

13ம் திருத்த சட்டத்தில் மேற்கொள்ளப்படுகின்ற சீராக்கல்களுக்கு எதிராக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்றைய தினம் ஜனாதிபதியிடம் கடிதம் ஒன்றைகையளித்துள்ளது.

கட்சியின் செயலாளர் ஹசன் அலி தலைமையிலான குழுவினர் இதனை கையளித்தனர்

13வது அரசியலமைப்பு சீர்த்திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டால்இ ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் சில கட்சிகள் விலக கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

இதன்காரணமாகவே 13 அரசியலமைப்பு சீர்த்திருத்திற்கு மேலும் சில சீர்த்திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் முயற்சிப்பதாக அந்த கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

இதனிடையே 13வது அரசியலமைப்பு சீர்த்திருத்தம் தொடர்பாக தமது கட்சி எந்த நேரத்திலும் வெட்கமடையாது என கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மண் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

நாட்டின் இறைமை பாதுகாக்கப்பட வேண்டுமானால்இ அதிகார பகிர்வு அவசியம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும் 13வது அரசியலமைப்பு சீர்த்திருத்தில் சில அதிகாரங்கள் மாற்றப்பட வேண்டும் என பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

இதனிடையே “காணி மற்றும் காவற்துறை அதிகாரங்கள் உடனான வட மாகாண சபை தேர்தல் வேண்டாம்” என்ற தொனிப்பொருளில் கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கைகள் இன்று பிற்பகல் கோட்டை தொடருந்து நிலையத்தின் முன்னால் இடம் பெற்றது.

TELO Media Team 1