Hot News
Home » செய்திகள் » அதிகாரப் பகிர்வு தமிழருக்கு இல்லை; நியூஸிலாந்து கவலை

அதிகாரப் பகிர்வு தமிழருக்கு இல்லை; நியூஸிலாந்து கவலை

இலங்கையில் தமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வு இன்னமும் கிடைக்கப்படவில்லை. அதிகாரப் பகிர்வு தொடர்பில் திருப்தி அடையக் கூடிய தீர்வுத் திட்டங்கள் இன்னமும் முன் வைக்கப்படவில்லை என்று நியூஸிலாந்து வெளிவகார அமைச்சர் முரே மெக்யுலி தெரிவித்துள்ளார்.

இலங்கைக்குக் கடந்த வாரம் பயணம் மேற்கொண்டிருந்த நியூஸிலாந்து வெளிவிவகார அமைச்சர்இ இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷஇ பொருளாதார அபிவிருத்தி அமைச் சர் பஸில் ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.

இந்த நிலையில் நியூஸிலாந்து திரும்பியுள்ள வெளிவிவகார அமைச்சர் அங்குள்ள  நாளிதழுக்கு வழங்கிய நேர்காணலிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள பொதுநலவாயத் தலைவர்கள் மாநாட்டில் சர்வதேச சமூகம் பங்கெடுப்பதன் ஊடாக இலங்கையின் நிலை மைகளை நேரில் பார்வையிட முடியும்.

மனித உரிமைகள் நிலைமைகள் மற்றும் ஏனைய குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நேரடி யாகப் பார்வையிட முடியும்.

வடக்கில் இன்னமும் அதிகாரப் பகிர்வு வழங்கப்படவில்லை. அதிகாரப் பகிர்வு தொடர் பில் திருப்தி அடையக்கூடிய தீர்வுத் திட்டங்கள் இன்னமும் முன்வைக்கப்படவில்லை.
இருப்பினும் செப்ரெம்பர் மாதம் அரசு வட மாகாண சபைத் தேர்தலை நடத்தவுள்ளது  என்றார்

TELO Media Team 1