Hot News
Home » செய்திகள் » யோசித்த மீது நடவடிக்கைக்கு பாதுகாப்பு அமைச்சின் பணிப்புரை எதிர்ப்பார்க்கப்படுகிறது- கடற்படை

யோசித்த மீது நடவடிக்கைக்கு பாதுகாப்பு அமைச்சின் பணிப்புரை எதிர்ப்பார்க்கப்படுகிறது- கடற்படை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் லெப்டினன்ட் யோசித்த ராஜபக்ச மீது நடவடிக்கை எடுப்பதற்காக தாம் இன்னும் பாதுகாப்பு அமைச்சின் கட்டளையை எதிர்ப்பார்ப்பதாக கடற்படை தரப்பு தெரிவித்துள்ளது.

கடற்படை பேச்சாளர் அக்ரம் அலவி கொழும்பின் ஊடகம் ஒன்றுக்கு இதனை தெரிவித்துள்ளார்.

யோசித்த தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கை பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

எனவே பாதுகாப்பு அமைச்சின் பணிப்புக்கு ஏற்பவே அடுத்தக்கட்ட நடவடிக்கையை எடுக்கமுடியும் என்று அலவி குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்ச பதவியில் இருந்தபோது யோசித்த கடற்படையின் பதவியை துஸ்பிரயோகம் செய்துள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

TELO Media Team 1