Hot News
Home » செய்திகள் » இனப்பிரச்சினை தீர்வுக்கு 13 அடிப்படையல்ல- பிரிட்டிஸ் தமிழர் பேரவை

இனப்பிரச்சினை தீர்வுக்கு 13 அடிப்படையல்ல- பிரிட்டிஸ் தமிழர் பேரவை

13வது அரசியல் அமைப்பை அடிப்படையாக கொண்டு இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படுவதை பிரிட்டிஸ் தமிழர் பேரவை கண்டித்துள்ளது

இது தொடர்பில் பேரவை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது

அதில்,இலங்கையின் தமிழரின் பிரச்சினைக்கு சர்வதேசத்தின் மத்தியஸ்தத்தில் நடத்தப்படும் சர்வஜன வாக்கெடுப்பின் அடிப்படையிலேயே தீர்வுக்காணப்படவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது

இதனை தவிர்த்து, 13வது அரசியலமைப்பை அடிப்படையாக வைத்துக்கொண்டு காணப்படும் தீர்வு இனப்பிரச்சினைக்கான அடிப்படைகளுக்கு தீர்வாக அமையாது என்று பேரவை சுட்டிக்காட்டியுள்ளது

இதனைத்தவிர இலங்கையின் தமிழர் பகுதியில் திட்டமிட்ட குடியேற்றம் உட்பட்ட அத்துமீறல்கள் தொடர்வதாகவும் பிரிட்டிஸ் தமிழர் பேரவை குற்றம் சுமத்தியுள்ளது

TELO Media Team 1