Hot News
Home » செய்திகள் » இலங்கையின் ஊடக ஒழுங்கை மனித உரிமைகள் கண்காணிப்பகம் கண்டித்துள்ளது

இலங்கையின் ஊடக ஒழுங்கை மனித உரிமைகள் கண்காணிப்பகம் கண்டித்துள்ளது

இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள உத்தேச ஊடக ஒழுங்குமுறையானது பேச்சு சுதந்திரத்தை கடுமையாக பாதிக்கும் என்று சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது

நியூயோர்க்கை தலைமையகமாக கொண்ட கண்காணிப்பகம் இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது

அதில், இலங்கையில் ஊடகங்களை கட்டுப்படுத்த அரசாங்கம் பல்வேறு முனைப்புக்களை மேற்கொள்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது

அரசாங்கம் கொண்டு வரும் இந்த ஊடக ஓழுங்கு சுயதணிக்கைக்கு ஒப்பானது என்றும் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது

ஏற்கனவே இலங்கையில் உள்ள ஊடகவியலாளர்கள் பல்வேறு அடக்குமுறைகளுக்கு உள்ளாகியுள்ள நிலையில் அரசாங்கத்தின் புதிய ஒழுங்குமுறை மேலும் அவர்களை கஸ்டத்துக்கு உள்ளாக்கும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் பிரட் அடம்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்

TELO Media Team 1