Hot News
Home » செய்திகள் » இந்தியா இலங்கையில் பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கிறது

இந்தியா இலங்கையில் பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கிறது

13 வது அரசியலமைப்பை ரத்துச்செய்யும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் நோக்கத்தை சிதறடிக்கும் வகையில் இந்தியா பிரிவினைவாத சக்திகளை ஊக்குவிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் அமைச்சர் விமல் வீரவன்ச இந்தக்குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

புpரிவினைவாத சக்திகளுக்கு உதவியளிப்பதில் இந்தியா பின்னின்று செயற்படுவதில் ரகசியங்கள் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை இந்தியா வரவழைத்து பேச்சு நடத்தியமை தொடர்பிலேயே அவர் இந்த விமர்சனத்தை வெளியிட்டுள்ளார்

இந்திய பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி ஆகியோர் பேச்சு நடத்தியது விடுதலைப்புலிகளின் பிரமுகர்கள் என்பதை அவர்கள் தெரிந்திருக்கவேண்டும் என்றும் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

 

TELO Media Team 1