Hot News
Home » செய்திகள் » சிவ்சங்கர் மேனன் இலங்கை செல்கிறார்

சிவ்சங்கர் மேனன் இலங்கை செல்கிறார்

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் எதிர்வரும் 7 ஆம் திகதியன்று இலங்கைக்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்தப்பயணத்தின் போது மேனன் இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ச உட்பட்டவர்களை சந்திக்கவுள்ளார்

இலங்கை அரசாங்கம் 13வது அரசியலமைப்பு திருத்தத்தில் மாற்றங்களை கொண்டு வரவுள்ள நிலையிலேயே மேனனின் வருகை இடம்பெறுகிறது

13வது அரசியல் அமைப்பில் மாற்றங்களை கொண்டு வரப்படுவதை தடுக்கவேண்டும் என்று கடந்த சில தினங்களாக இந்தியாவுக்கு சென்றிருந்த தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினர் இந்திய பிரதமரிடம் முறைப்பாட்டை செய்திருந்தனர்

இதன் அடிப்படையிலேயே மேனனின் விஜயம் ஏற்பாடாகியுள்ளது

TELO Media Team 1