Hot News
Home » செய்திகள் » கூட்டமைப்பின் இலக்கை அடைய விடமாட்டோம்; லக்ஸ்மன் அபேவர்த்தன

கூட்டமைப்பின் இலக்கை அடைய விடமாட்டோம்; லக்ஸ்மன் அபேவர்த்தன

விடுதலைப் புலிகள் துப்பாக்கிகளின் மூலம் அடைய நினைத்ததை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனநாயக ரீதியாக அடைவதற்கு சிறிலங்கா அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது என முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் செய்யக் கூடியது ஒன்றுமில்லை. ஆனால் இந்த விவகாரத்தை பின்தள்ளிப் போடலாம். அது தமிழ் மக்களுக்கு தீங்கானது. எதைச் செய்ய வேண்டுமானாலும் அவர்கள் தெரிவுக்குழு முன் தோன்ற வேண்டும்.

தற்போதைய பிரச்சினைக்கு சிறிலங்கா அரசாங்கத்தினாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினாலும் தனித்து தீர்வு காணமுடியாது. அவர்கள் ஒரு ஜனநாயக வழிமுறைக்கு வந்தால் அந்த வழியிலேயே தொடர்ந்து நிற்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விடுதலைப் புலிகளின் வழியைப் பின்பற்ற முயற்சித்தால் சிறிலங்கா அரசாங்கம் அதைப் பொறுத்துக் கொண்டிருக்காது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் தனித் தமிழ் தாயகம் என்ற நிலைப்பாட்டிலேயே உள்ளது

அதற்கு சிறிலங்கா அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது. தெரிவுக்குழுவில் பங்கேற்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரும்பவில்லை. ஏனெறன்றால் அவர்களுக்கு தேசிய பிரச்சினை தீர்க்கப்படுவதில் விருப்பமில்லை.

தெரிவுக்குழுவுக்கு உறுப்பினர்களை நியமிக்குமாறு அண்மையில் இரா.சம்பந்தனிடம் ஜனாதிபதி கேட்டிருந்தார். ஆனால் இரா.சம்பந்தன் அந்த அழைப்பை நிராகரித்து விட்டார் என அவர்  குறிப்பிட்டுள்ளார்.

TELO Media Team 1