Hot News
Home » செய்திகள் » மன்னாரில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல்

மன்னாரில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல்

முள்ளிவாய்க்காலில் வகை தொகையின்றி இன அழிப்பு செய்யப்பட்ட எமது மக்களின் ஆத்ம சாந்தி வேண்டி  மன்னாரில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் மன்னார் நகர சபை மண்டபத்தில் இன்று காலை 11 மணியளவில் குறித்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கான ஆத்ம சாந்திப் பிரார்த்தனை, மலர் அஞ்சலி செலுத்துதல், மற்றும் தீபமேற்றுதல் போன்ற நிகழ்வுகள் இடம் பெற்றது.

முதலில் இறுதி யுத்தத்தின் போது தனது குடும்ப உறவுகள் அனைவரையும் இழந்த சந்திரசேகரன் பிருந்தா என்ற சிறுமி சுடர் ஏற்றி அஞ்சலி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து இறுதி யுத்தத்தில் தனது கணவனை இழந்த கேதீஸ்வரன் பத்மினி என்ற பெண் மலர் மாலை அணிவித்தார்.

கலந்து கொண்ட அனைவரும் தமது உறவுகளுக்கு தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தியதோடு, மலர் அஞ்சலியும் செலுத்தினர்.

இதன்போது, தமது உறவுகளை இழந்த உறவினர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

இதன் பின்னர் சர்வமதத் தலைவர்களினால் அஞ்சலி உரை நிகழ்த்தப்பட்டது.

குறித்த நினைவேந்தல் நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைமைக்குழு உறுப்பினருமான  எஸ்.வினோ நோகராதலிங்கம், உள்ளுராட்சி மன்றங்களின் முன்னாள் தலைவர்கள், உப தலைவர்கள், உறுப்பினர்கள்,யுத்தத்தில் பாதிக்கப்பட்டு உயிர் நீத்தவர்களின் உறவினர்கள், பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள் என நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.

13240062_1020295774726269_4200432851258493301_n