Hot News
Home » செய்திகள் » கனேடிய வாழ் புலம்பெயர் தமிழர்கள் நாடோடிகள்: முஸ்லிம் அமைச்சர் சாடல்

கனேடிய வாழ் புலம்பெயர் தமிழர்கள் நாடோடிகள்: முஸ்லிம் அமைச்சர் சாடல்

கனேடிய வாழ் புலம்பெயர் தமிழ் சமூகத்தை நாடோடிகள் என ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான ஏ.எச்.எம். அஸ்வர் சாடியுள்ளார்.
நாடோடிகளுக்கு கனேடிய புலம்பெயர் தமிழர்களுக்கும் இடையில் ஒரே வித்தியாசம் தான் காணப்படுகின்றது. நாடோடிகளிடம் பணமில்லை, கனேடிய புலம்பெயர் தமிழர்களிடம் பணம் உள்ளது.

அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சம்பந்தன், இலங்கை வாழ் தமிழர்களுக்கு நிகரானவர்கள் உலகம் முழுவதிலும் வாழ்ந்து வருவதாகத் தெரிவித்திருந்தார்.

அதில் அதிகளவானர்கள் கனடாவில் வாழ்ந்து வருகின்றனர். அவர்களில் சிலர் அந்நாட்டு அரச நிர்வாகத்துடனும் தொடர்பு கொண்டிருக்கின்றனர்.

இதனால் தமிழர்களின் கோரிக்கைக்கு ஏற்ப புலிகளுக்கு கனடா சட்ட ரீதியாக அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.

கனேடிய தமிழர்கள் இலங்கை வாழ் தமிழர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த கவலைபட்டதில்லை. புலம்பெயர் என்ற பெயரில் பல தமிழ் அமைப்புக்கள் செயற்பட்டு வருகின்றன.

போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாக அஸ்வர் தெரிவித்துள்ளார்.

புலிகளுடன் தொடர்புடைய அமைப்புக்களை தடை செய்ய முடியாது என கனடா அறிவித்தமை தொடர்பில் சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு அஸ்வர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்

TELO Media Team 1