கல்முனையில் தனியார் வங்கியொன்றில் நேற்று திங்கட்கிழமை 5000 ரூபா போலி நாணயத்தாள்கள் இரண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
.இது சம்பந்தமாக தெரிய வருவதாவது.
கல்முனையில் உள்ள ஹட்டன் நேஷனல் வங்கியின் வங்கி நடவடிக்கைகளை நேற்று பிற்பகல் 3.30 மணிக்கு இடைநிறுத்தி வங்கியை மூடியதன் பின்னர் கணக்குகளை சரிபார்கின்ற நேரத்தில் வங்கி அதிகாரிகளால் 5000 போலி நாணயத்தாள்கள் இரண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
போலி நாணயத்தாள்கள் கிடைக்கப்பெற்ற காசாளர் வங்கி முகாமையாளரின் கவனத்துக்கு உடனடியாக கொண்டுவந்ததையடுத்து இரண்டு 5000 ரூபா போலி நாணயத்தாள்களும் கல்முனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப் பட்டுள்ளது.
பொலிசார் இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
வங்கிகளில் இடம் பெற்றுவரும் கொள்ளை சம்பவங்கள் மற்றும் போலி நாணயத்தாள்கள் விடயங்கள் தொடர்பாக கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் சமீபத்தில் கல்முனையில் உள்ள 15க்கும் மேற்பட்ட வங்கிகள், நிதி நிறுவனங்களின் தலைவர்களுக்கு தெளிவூட்டல் நிகழ்வொன்றும் இடம்பெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது