Hot News
Home » செய்திகள் » டெலோ தலைவர் ஸ்ரீ சபாரெத்தினத்தின் நினைவு தினம் நேற்று மட்டக்களப்பபில் நடைபெற்றது. இது தொடாபன நிலற்படங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன.

டெலோ தலைவர் ஸ்ரீ சபாரெத்தினத்தின் நினைவு தினம் நேற்று மட்டக்களப்பபில் நடைபெற்றது. இது தொடாபன நிலற்படங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) தலைவர் ஸ்ரீ சபாரெத்தினத்தின் 28வது நினைவு தினம் மட்டக்களப்பு மாவட்ட கட்சி அலுவலகத்தில் கட்சியின் உப தலைவரும், கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான பிரசன்னா இந்திரகுமார் தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

இந்நிகழ்வில் கட்சியின் தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோதரதலிங்கம், கட்சியின் உப தலைவரும், கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான கோ.கருணாகரம், மற்றும் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் எஸ்.குணசேகரம், மாவட்ட உப செயலாளர் எஸ்.சற்குணராஜா, கட்சியின் மூத்த உறுப்பினர்களான எஸ்.ஞானப்பிரகாசம், எஸ்.தேவராஜா மற்றும் கட்சி அங்கத்தவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது கட்சியின் தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோதரதலிங்கம் ஆகியோரால் திருவுருப் படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டது.

அத்துடன் கட்சியின் உப தலைவர்களும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களுமான பிரசன்னா இந்திரகுமார், கோ.கருணாகரம் ஆகியோரால் திருவுருப் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு நினைவு கூறப்பட்டதுடன், நினைவுப் பேருரையும் இடம்பெற்றது.








TELO Media Team 1