Hot News
Home » செய்திகள் » 500 மில்லியன் நஷ்டஈடு கோரி பொதுபல சேனாவுக்கு எதிராக வழக்கு

500 மில்லியன் நஷ்டஈடு கோரி பொதுபல சேனாவுக்கு எதிராக வழக்கு

கைத்தொழில் மற்றும் வர்த்த அமைச்சர் ரிஷாத் பதியூதீன் பொது பல சேனாவிற்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் இன்று வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், தனக்கு எதிராக தெரிவித்த கருத்துக்களுக்கு மன்னிப்புக் கோருமாறு அனுப்பிய கடிதத்திற்கு அவர் பதிலளிக்கவில்லை என தெரிவித்து, தனக்கு 500 மில்லியன் ரூபா நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும் என்று கோரி அமைச்சர் ரிசாத் பதியூதீன் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் 20ம் திகதி இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போது, ஞானசார தேரர், அமைச்சருக்கு எதிராக பொய்யான கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

வில்பத்து சரணாலயத்தில் 22 ஆயிரம் ஹெக்டேர் காணிகளை அழித்து, அதில் முஸ்லிம் அராபிய கொலனி ஒன்றை அமைப்பதாக பொதுபல சேனா அமைப்பினர் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை தடுக்கும் செயற்பாட்டில் பொதுபல சேனா செய்து வருகின்றது. பொய்யான பரப்புரையின் மூலம் மீண்டும் இன முறுகலை ஏற்படுத்த அவர்கள் முனைகின்றனர் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

TELO Media Team 1