Hot News
Home » செய்திகள் » இலங்கையையும் மாலைதீவையும் இந்திய புலனாய்வு பிரிவு கண்காணிப்பு

இலங்கையையும் மாலைதீவையும் இந்திய புலனாய்வு பிரிவு கண்காணிப்பு

தென்னிந்தியாவை தாக்குதல் மையமாகக் கொண்டு பாகிஸ்தானிய தீவிரவாதிகள் இலங்கையையும் மாலைதீவையும் பயன்படுத்துவதாக இந்திய புலனாய்வு பிரிவினர் சந்தேகிக்கின்றனர்.
இதனையடுத்து இந்த இரண்டு நாடுகளையும் கண்காணிக்கும் நடவடிக்கைகளை அவர்களை மேற்கொண்டுள்ளனர் என்று தெ டைமஸ் ஒப் இந்தியா தெரிவித்துள்ளது.

இலங்கை பிரஜையான சாகீர் ஹுசைன் இலங்கையில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரத்துக்கு உளவு பார்க்கும் போது தமிழகத்தில் வைத்து அண்மையில் கைது செய்யப்பட்டார்.

அவர் வழங்கிய தகவலை அடுத்தே இந்தியா, இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகள் மீது தமது கண்காணிப்பை திருப்பியுள்ளது.

தாம், தென்னிந்தியாவில் உள்ள அமெரிக்க மற்றும் மேற்கத்தைய நாடுகளின் அலுவலகங்களையும் இந்திய நிலைகளையும் உளவு பார்த்ததை ஏற்றுக்கொண்டுள்ளார்.

அத்துடன் இலங்கையில் உள்ள பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகரக ராஜதந்திரி ஒருவர், மாலைத்தீவில் இருந்து சென்னைக்கு இரண்டு பேரை அனுப்பிவைக்க உதவியதாகவும் இலங்கையர் தமது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் மாலைதீவு மற்றும் இலங்கை ஆகியன பாகிஸ்தானுடன் அதிக நட்பை கொண்ட நாடுகளாக உள்ளன.

எனவே இந்த இரண்டு நாடுகளையும் பாகிஸ்தானிய தீவிரவாதிகள் மையப் பகுதியாக பயன்படுத்த முடியும் என்பதே இந்திய புலனாய்வினரின் கருத்தாக உள்ளது.

TELO Media Team 1