உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட ஆயுதங்களுடன் ஒருவரை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
வெலிகந்த மஹாவலிதென்ன சிங்கப்புரஎ என்னும் இடத்தில் வைத்து சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட இரண்டு துப்பாக்கிகள் குறித்த நபரிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது.
வெலிகந்த பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரை இன்று பொலனறுவை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.