Hot News
Home » செய்திகள் » மத விவகார பொலிஸ் பிரிவினை வெசாக் தினத்திற்கு முன் கலைக்க வேண்டும்! !ராவணா சக்தி கோரிக்கை

மத விவகார பொலிஸ் பிரிவினை வெசாக் தினத்திற்கு முன் கலைக்க வேண்டும்! !ராவணா சக்தி கோரிக்கை

மத விவ­கா­ரங்கள் தொடர்பில் அமைக்­கப்­பட்­டுள்ள விசேட பொலிஸ் பிரி­வினை உட­ன­டி­யாக கலைக்க வேண்டும்.இல்­லையேல் மோச­மான பின் விளை­வு­களை அனை­வரும் எதிர்­கொள்ள வேண்டிவரும் என ராவணா சக்தி அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மத விவ­கா­ரங்­க­ளுக்­கான பொலிஸ் பிரி­விற்கு எதிர்ப்புத் தெரி­வித்து நேற்று பௌத்­த­சா­சன அமைச்­சிற்கு சென்ற ராவணா சக்தி அமைப்பின் செயலாளர் இத்தேபான சத்தா திஸ்ஸ தேரர் தமது கோரிக்கை அடங்கிய மகஜரை மதவிவகார பிரதி அமைச்சர் எம்.கே.ஏ.டி.எஸ். குணவர்தனவிடம் கையளித்துள்ளார்.

இதன்­போது ராவணா சக்தி அமைப்பின் பொதுச் செய­லாளர் இத்தேபான சத்தா திஸ்ஸ தேரர் கருத்துத் தெரி­விக்­கையில்,

இலங்­கையில் மத அடக்கு முறைகள் மிகக் குறை­வா­கவே உள்­ளது. பெரும்­பான்மை இனத்­த­வ­ரினால் ஒரு­போதும் சிறு­பான்மை மதத்­த­வர்கள் ஒடுக்­கப்­ப­ட­வில்லை.

எனினும், சிறு­சிறு பிரச்­சி­னை­களை பெரி­து­ப­டுத்தி சர்­வ­தேச அளவில் கொண்டு செல்­லவே முஸ்­லிம்கள் எத்­த­னிக்­கின்­றனர்.

தற்­போது மதப் பிரச்­சி­னைக்­கான பொலிஸ் பிரிவு அமைக்­கப்­ப­ட்டுள்ளதனால் நாட்டில் மத அடக்கு முறை தலைவிரித்தாடுகின்றது என்ற செய்தி சர்­வ­தே­சத்­திடம் எடுத்துச் செல்லப்படுகின்றது. இது ஒரு­சி­லரின் திட்­ட­மிட்ட சதித்­திட்­ட­மாகும்.

ஜனா­தி­பதி இதனை உட­ன­டி­யாக கவ­னத்திற் கொண்டு மத விவ­காரப் பொலிஸ் பிரி­வினை தடை­செய்ய வேண்டும். ஒரு­சில சூழ்ச்­சிக்­கா­ரர்­களின் கதையைக் கேட்டு ஜனா­தி­பதி தவ­றான முடி­வு­களை எடுத்து விடக்­கூ­டாது.

மேலும், எதிர்­வரும் வெசாக் தினத்­திற்கு முன்னர் இந்தப் பொலிஸ் பிரி­வினை கலைக்­க ­வேண்டும். இல்­லையேல் மோச­மான பின் விளை­வு­களை அனை­வரும் எதிர்­கொள்ள வேண்டிவரும். இதனை நாம் கடு­மை­யாக எச்­ச­ரித்து குறிப்­பி­டு­கின்றோம்.

இதற்கு மேலும் மத விவ­காரம் தொடர்பான பொலிஸ் பிரி­வினை செயற்படுத்தினால் பௌத்தசாசன அமைச்சினுள் எமது எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வோம். அமைச்சுக்குள் உட்பிரவேசித்து எமது அமைப்பினர் ஆர்ப்பாட்டங்களை செய்வார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

TELO Media Team 1