தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை கைது செய்யுமாறு தேசிய சுதந்திர முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பின் சார்பில் நினைவுகூரல் வைபவங்களை ஏற்பாடு செய்வது நாட்டின் சட்டத்தை கடுமையாக மீறும் செயல் என தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள தேசிய சுதந்திர முன்னணி, விடுதலைப் புலிகளை நினைவுக்கூரும் வைபவம் ஒன்றை எதிர்வரும் 18 ஆம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
நாட்டில் தடைசெய்யப்பட்டுள்ள இயக்கம் ஒன்றை நினைக்கூரும் வகையில் வைபவங்களை ஏற்பாடு செய்வது அந்த இயக்கத்திற்கு மீண்டும் உயிரூட்டும் நடவடிக்கையாகும்.
நாட்டின் சட்டத்தை கவனத்தில் கொள்ளாது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொண்டு வரும் இப்படியான நடவடிக்கைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும், கூட்டமைப்பினரை கைது செய்யுமாறும் தேசிய சுதந்திர முன்னணி கேட்டுக்கொண்டுள்ளது