Hot News
Home » செய்திகள் » புதிய பொலிஸ் பிரிவை நீக்குவது குறித்து கவனம் செலுத்தப்படும் – அரசாங்கம்

புதிய பொலிஸ் பிரிவை நீக்குவது குறித்து கவனம் செலுத்தப்படும் – அரசாங்கம்

புதிய பொலிஸ் பிரிவை நீக்குவது குறித்து கவனம் செலுத்தப்பட உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

மத விவகாரங்கள் தொடர்பில் விசரணை நடாத்தும் நோக்கில் புதிய பொலிஸ் பிரிவொன்று அண்மையில் உருவாக்கப்பட்டது.

இந்தப் பொலிஸ் பிரிவை நீக்குவது குறித்து கவனம் செலுத்தப்பட உள்ளதாக அரசாங்கப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல நேற்று தெரிவித்துள்ளார்.

இந்தப் பொலிஸ் பிரிவை அகற்றிக் கொள்ளுமாறு ராவனா பலய அமைப்பு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தக் கோரிக்கை குறித்து பரிசீலனை செய்யப்படும்.

இந்தப் பிரச்சினை குறித்து அரசாங்கம் ஒரு கோணத்தில் பார்த்து தீர்மானம் எடுத்துள்ளது.

ஏனைய கோணங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

ரவனா பலய அமைப்பின் கோரிக்கை குறித்து கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கத் தயார் என கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

நாரேஹன்பிட்டியில் அமைச்சரவைத் தீர்மானங்களை அறிக்கும் செய்தியாளர் சந்திப்பில் பஙகேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

TELO Media Team 1