Hot News
Home » செய்திகள் » யாழ். மானிப்பாயில் 5வது தடவையாக வெசாக் வலயம்

யாழ். மானிப்பாயில் 5வது தடவையாக வெசாக் வலயம்

யாழ். மானிப்பாய் பிரதேசத்தில் 5வது தடவையாக இம்முறையும் வெசாக் வலயம் பிரகடனப்படுத்தப்படவுள்ளது.

“யாப்பா பட்டுனய் தஹம் அமாவய்” என்னும் தொனிப்பொருளில் மே 14ம் திகதி முதல் 16ம் திகதி வரையில் காட்சிக்கு வைக்கப்படும் இந்த வெசாக் வலயத்தினை யாழ் பெளத்த சங்கமும் பாதுகாப்பு சேவைத் தலைமையகமும் இணைந்து நடத்துவதாக இராணுவ ஊடகப் பிரிவின் பணிப்பாளர் தெரிவித்தார்.

கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்திக்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

வெசாக் வலயத்தில் 43 அடி உயரத்திலும் 42 அடி அகலத்திலும் பிரமாண்டமான வெசாக் பந்தல் அமைக்கப்படவுள்ளது. இதனை 60 ஆயிரம் மின்குமிழ்கள் அலங்கரிக்கும்.

பாடசாலை மாணவர்கள் மற்றும் தொழில்நுட்பம் பற்றி அதிக ஆர்வம் கொண்டவர்களை கவரும் வகையில் நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் இந்தப் பந்தல் அமைக்கப்படவுள்ளது.

இதனை மே 14ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரையில் பார்வையிட முடியும்.

யாழ். மாவட்டக் கட்டளைத் தளபதி உதய பெரேராவின் மேற்பார்வையின் கீழ் இராணுவத்தினர் இதற்கான கட்டுமானப் பணிகளை ஆரம்பித்துள்ளனர்.

இதில் புதிய அம்சமாக தமிழ், சிங்களம் ஆகிய இரு மொழிகளிலும் பக்தி பாடல்கள் இசைக்கப்படவுள்ளன. மேலும் வெசாக் வலையத்தினை பார்வையிட வரும் அனைத்து மக்களுக்கும் நள்ளிரவு வரை உணவு குளிர்பானங்களை வழங்குவதற்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

TELO Media Team 1