Hot News
Home » செய்திகள் » தமிழர் பிரச்சினைக்கு அரசியல்தீர்வு காண்பது இந்தியாவின் பொறுப்பு – கூட்டமைப்பிடம் மன்மோகன்சிங் உறுதி

தமிழர் பிரச்சினைக்கு அரசியல்தீர்வு காண்பது இந்தியாவின் பொறுப்பு – கூட்டமைப்பிடம் மன்மோகன்சிங் உறுதி

நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை புதுடெல்லியில் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் இன்று பிற்பகல் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.இதன்போது சிறிலங்காவில் தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதில் இந்தியாவுக்குப் பொறுப்பு உள்ளது என்று இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் ஏற்றுக் கொண்டுள்ளார். “சிறிலங்காவில் உள்ள தமிழர்கள் அமைதியான சூழலில் கண்ணியமாகவும் சுயமரியாதையுடனும் வாழ வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்து இந்தியா ஒரு போதும் பின்வாங்காது. தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான எமது முயற்சிகள் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இந்தியா தொடர்ந்து பேச்சுக்களை நடத்தும்.” என்றும் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார். இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராசா, சுமந்திரன், சுரேஸ் பிறேமச்சந்திரன், செல்வராசா, செல்வம் அடைக்கலநாதன், விநாயகமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்குடன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

TELO Admin