இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்ட தகவல்

இந்தியா தனது படைகளை இலங்கைக்கு அனுப்புவதாக ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகத் துறைகளில் ஊகச் செய்திகளை வன்மையாக நிராகரிப்பதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இந்திய உயர்ஸ்தானிகராலயம் ட்விட்டர் செய்தியில் இதனைத் தெரிவித்துள்ளது.

ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் பொய்யானவை என்று கூறியுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகம், வெளியிடப்பட்ட அறிக்கைகள் மற்றும் கருத்துக்கள் இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டுடன் ஒத்துப்போவதில்லை என மேலும் தெரிவித்துள்ளது.

மேலும், இந்திய வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனநாயக அமைப்புகள் மற்றும் மதிப்புகள் மற்றும் அரசியலமைப்பு கட்டமைப்பின் மூலம் செழிப்பு மற்றும் முன்னேற்றத்தை விரும்பும் இலங்கை மக்களுடன் இந்தியா நிற்கிறது என்று உயர் ஸ்தானிகர் அலுவலகம் அறிவித்துள்ளது.

மேலும், இலங்கையில் உள்ள ராஜபக்ச குடும்பத்திற்கு ஆதரவாக இந்திய இராணுவத்தை அனுப்புமாறு இந்தியாவின் மூத்த பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பரிந்துரைத்துள்ளதாகவும் அவர் தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.