உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தியது யார் என்பது தொடர்பில் நீதிவான் முன்னிலையில் இரகசிய வாக்குமூலம் வழங்க விரும்பவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.
இதனை இன்று (03) மாளிகாகந்த நீதிவான் லோச்சனி அபேவிக்ரம வீரசிங்கவுக்கு அறிவித்துள்ளார்.
சட்டத்தரணி சந்தீப்த சூரிய ஆராச்சியின் மனுவின் அடிப்படையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்னவின் ஊடாக மைத்திரிபால சிறிசேனவின் இந்த நிலைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.