ஈழமக்கள் மீதும் ஈழ விடுதலைமீதும் தனியாத ஈர்ப்புக்கொண்டு இதய தெய்வமாய் வாழ்ந்த எம் ஜி ஆர் அவர்கள் இறந்த  தினம் இன்று

எமது ஈழ தமிழ் மக்கள் மீதும் ,ஈழத்தின் மீதும் மிகுந்த ஈர்ப்பு கொண்டவராக மக்கள் மனதில் இதய தெய்வமாக போற்றப்படுகின்றவராக இன்றும் நினைவில் கொள்ளப்படுபவர் தமிழ்நாட்டின் மறைந்த முதல்வர் மக்கள் திலகம் எம் ஜி ஆர் அவர்கள் என்றால் அது மிகையாகாது.

ஈழமக்களின் மீது ஈழத்தின் மீதும் அவர் கொண்டிருந்த பற்றின் நிமித்தமாக பல்வேறுபட்ட உதவிகளை ஆற்றியிருந்தார். எமது தாயக மக்களுக்கு அவர்கள் மேல் சிங்கள அரசினால் கட்டவிழ்த்துவிட்ட ஒவ்வொரு இனக்கலவரங்களின் போதும் மக்கள் தமிழ்நாட்டில் தஞ்சம் கோரிய நிலையில் எமது மக்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்கிய வள்ளல் எமது எம் ஜி ஆர் அவர்கள்.

இந்திய மத்திய அரசாங்கத்திடமும், இலங்கையை ஆண்ட ஆட்சியாளர்களிடத்திலும் ஈழ மக்கள் சார்பான தொடர்ச்சியான கோரிக்கைகளை முன்னிறுத்தி மக்கள் மீது தொடுக்கப்படும் அத்துமீறல்களுக்கு எதிராகவும், இராணுவ நடவடிக்கைகளுக்கு எதிராகவும் குரல் கொடுத்தவர் எமது மக்கள் திலகம் எம் ஜி ஆர் அவர்களாவார்.

மக்கள் திலகம் எம் ஜி ஆர் அவர்கள் இறந்து 37 வருடங்கள் நிறைவுற்றாலூம் அவர்களின் இறந்ததினமாகிய இன்று அவர் ஈழ மக்கள் மீதும் ஈழ விடுதலைமீதும் கொண்டிருந்த அளவுகடந்த பற்றினை மீண்டும் நினைவில் கொள்வது இன்றைய நாளில் பொருத்தமானதே.

அ.அடைக்கலநாதன்.
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்
தலைவர்
தமிழ் ஈழ விடுதலை இயக்கம் ரெலோ