உரிமை எனும் குரலினால் உயர்ந்தவரே
உலகத்தார் இன்றுவரை நினைத்தனரே
இம்மண்ணில் – அரியதொரு பணியினை ஆற்றி சென்றாய்
ஆறாத என் துயரும் இன்று வரை தீரவில்லை
கால் வீழாத தமிழினத்தின் வீரன்-நீ
தலைவன் நீ எங்கள் சிறி அண்ணா
விந்தை பலசெய்து நின்றாய்- எமக்கு சிந்தனையால் பல வழிகள் சொல்லி நின்றாய்
சீரான தமிழ் இன வாழ்வுக்காய்
சிறப்பான படையணி நடாத்தி – அதிரவைத்தாய்
அழகான உன் பயணம் அரங்கேற முன்னே வெறும் அநியாயம் கொடிகட்டி- பறந்ததண்ணா
விரைவாக விடுதலை வெல்வோம் என்றாய்
வீரர்களே அணி திரண்டு வாரீர் என்றாய்
ஆளுமை மிகு தலைவன் நீ – ஈழமண்ணில்
ஆற்றல்மிகு பணிகளையே செய்து நின்றாய்- தலைவா தமிழா
போற்றல்மிகு பணிகளையே உன் தலைமேல் கொண்டாய்
போராளி அமைப்புகளை ஒன்றாக்கி வைத்தாய் – ஈழப்போர் முறையில் வெற்றி கண்டாய் பேராற்றல் மிகு தலைவன் ஆனாய்
சிங்கத்தின் வால் தன்னை பிடிக்காமல் –
சிற்றெறும்பின் தலையாக நிமிர்ந்து நின்றாய்
முழு அன்புக்கும் நீதானே
எங்கள் அண்ணா –
தமிழ் பண்புக்கும் நீதானே அன்றும் இன்றும் என்றும்
எம் தலைவர்களே!
சிறைக்குள் நீங்கள் சிந்திய இரத்தம் -எம்
இதய அறைக்குள் அல்லவா புகழிடம்பெற்றது
வன்முறை தழுவா வாழ்வியல் சொன்ன-
அண்ணனின் கண்களில் வேலிடை பாய்ந்தால்
வேலியே பயிரை மேய்ந்திட இங்கே வேரோடு எம்மினம் வீழ்ந்திடுமென்றால்
போரிடும்முறையில்புறமுதுகிடா
தமிழ்த்தேரிடை நெரித்து மனு – நீதி சொன்ன பரம்பரை நீ
இம்மண்ணில் நிமிர்ந்து உரிமை கேட்டது பிழையா தமிழா !
அன்று சுதந்திரம் வேண்டி அனைவரும் ஒன்றாய் இணைந்து நின்றோம் ஆங்கிலப் படைகள் அநீதிகள் கேட்க வீதியில் இறங்கி விடுதலை கேட்டோம்
விரும்பியோ விரும்பாமலோ சுதந்திரம் பெற்றோம்
எல்லைகள் மாறி எம் மண்ணை இழந்தோம்
புத்தன்காந்திசொன்ன புதிய பாதை நிமிர்ந்து காத்தோம்
சத்தியம் நேர்மை சாந்தமாக எத்தனை பாதை திறந்து பார்த்தோம்
கையில் விலங்கு எம் – கழுத்தில் சுருக்கு
வீழ்ந்த போதும் நிமிர்ந்து கேட்டோம்
வேண்டாம் வேண்டாம் நிறுத்து என்று வேண்டித் தானே நாமும் நின்றோம்
எம்இனத்தின்மீது
இறுதிகயிற்றைஇறுக்கும்போது தானே நாமும் –
இழுத்து அறுத்து போக நினைத்தோம்
வன்முறை மீது காதல் கொள்ள எம்வாழ்வைத்தானே இம்மண்ணில்
தேம்பிக்கேட்டோம்
கூடு பிய்த்துக் கலைத்த போதும் நாங்கள் இம்மண்ணில் – கூரையற்று அலைந்த போதும் எம்முயிர் வாழத் தானே உரிமை கேட்டோம்
தீர்க்கவேண்டிய மேசை எல்லாம் தீக்கிரையாக்கிய போதும் கூனிக்குறுகி நாங்கள்- இந் நாட்டுக் குடிமகன் என்று குழந்தைபோல் அழுதுநின்றோம்
காது கேட்கா செவிடர்கள் போலே
கண்களற்ற குருடர்களாக – எம்
வாழ்விழக்க வைத்ததும் – எம்
மண்ணின் வளம் பறிக்கத் துணிந்ததும் – தினம்
களமிறங்கிப் படைகளுக்கு தமிழ் இன காழ்புணர்வை ஊட்டியதும்
ஈழமண் உயிர்களையே இரக்கமற்று இரையாக்கி பார்த்தது போதும் என்றும் நிறுத்தாமல் போய்க்கொண்டே இருக்கிறது எம் தலைவர்களே !
நீதிமன்ற வாசலிலே நின்றுரைத்த வரிகளை நீதிமன்றம் காத்திருந்தால் தமிழ் இனம் மீது – போர் அறைந்த பேய்களையே சிறைக்குள்ளே தள்ளி இருந்தால்
நாடு திருந்தி இருக்கும்
நம் இனமும்இணைந்திருக்கும்
கோபுரம் போல் புகழ் பறந்திருக்கும்
பாரெங்கும் இந்நாட்டின் கொடி பார்ப்போர் மனதில் சிறந்திருக்கும்
தலைவர்கள் சொன்ன வழி சரித்திரமாக அமைந்திருந்தால் இன்று சிங்கத்தின் தலைமேல்
சிற்றெறும்பின் – தலையெல்லாம்
சிகரம் போல் எழுந்திருக்கும்
சிங்கமது வாள் ஏந்தி இம்மண்ணை இனி சீராக்க முடியாது
சீரான பாதையினை சீக்கிரமே தேடவேண்டும்
சிறி அண்ணா நினைவு நாளினிலே
இனிய பணி தொடர வேண்டும்
ஒன்றுபட்டு நாமெல்லாம் இன்று ஓரணியில் நிமிர்ந்துநின்று
ஈழதேசத்தை இளையோரிடம் கையளிக்க
இனமானம் காத்து நிற்போம்
வீழ்ந்தும் எழுந்துநிற்கும்
என்றும்
வீழாத தமிழ் தாயை
விரைவாக மீட்டெடுப்போம்
சிறி அண்ணா தந்த சீரான வழியை
சிறப்பாக எம் மனதில் உயர்த்தி வைப்போம்.
நன்றி
பிரச்சார செயலாளர்: சொக்கன் நா .கணேசலிங்கம்