காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி போராட்டத்தில் ஈடுபட்ட 87 பேர் இதுவரை உயிரிழப்பு

வடக்கு- கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி, அவர்களது உறவுகள் தொடர் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் குறித்த போராட்டத்தில் ஈடுபட்ட 87பேர், தங்களது உறவுகளை தேடி அவர்களை கண்டுப்பிடிக்காமலேயே உயிரிழந்துள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்ட தங்களது உறவுகள் இருக்கின்றார்களா? அவர்களுக்கு என்ன நடந்தது? என கோரி மிகவும் நீண்ட காலமாக அவர்களது உறவுகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இவ்வாறு தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட தாய்மார்கள் மற்றும் தந்தைமார்கள் பல்வேறு துன்பங்களுக்கு உள்ளாகி, நோயினால் பீடிக்கப்பட்டு, வைத்தியசாலையில் ஏனைய உறவுகளின் பாதுகாப்பில் உள்ளனர்.

இவ்வாறு நோயினால் பீடிக்கப்பட்டிருந்த 87 பேர், சிகிச்சைப் பலனின்றி இதுவரை உயிரிழந்துள்ளனர். வவுனியாவில் மாத்திரம் 17பேர் உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு போராட்டத்தில் ஈடபட்ட உறவுகள் பலர் உயிரிழந்தப்போதும் இதுவரை அவர்களுக்கான நீதியை எவரும் பெற்றுக்கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.