பக்டீரியா உள்ளடங்கியுள்ளதாக உறுதி செய்யப்பட்ட சேதன உரத் தொகையை இலங்கைக்கு எடுத்து வந்ததாக கூறப்படும் சீன நிறுவனத்திற்கு அதன் உள்நாட்டு முகவர் பணம் செலுத்துவதை தடுத்து நிறுத்துமாறு மக்கள் வங்கியிற்கு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தடை உத்தரவு இம்மாதம் 19 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு வர்த்தக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு கொமர்ஷல் உர நிறுவனம் தாக்கல் செய்த மனு இன்று (09) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.