திருகோணமலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம் கொரோனவால் மரணம்!

திருகோணமலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம் மரணம் அடைந்துள்ளார்.

இவர் மூதூர் கிழக்கு சேனையூர் மத்திய கல்லூரியின் முன்னாள் அதிபரும்,
திருகோணமலை மாவட்ட சாரணர் சங்கத்தின் குருளைச் சாரணர் பிரிவுக்கு பொறுப்பான உதவி மாவட்ட ஆணையாளரும், இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட முந்நாள் தலைவரும் ஆவார்.

கந்தளாய் தள வைத்தியசாலையில் கொவிற் தொற்று சிகிச்சைக்கு உட்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமானார்.

சடலம் தற்போது கந்தளாய் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்ட மேனாள் பாராளுமன்ற உறுப்பினர் துரைரட்ணசிங்கம் ஐயாவின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்து அஞ்சலிக்கின்றோம்.

தமிழ் ஈழ விடுதலை இயக்கம்