பாகிஸ்தானிலுள்ள அனைத்து இலங்கையர்களையும் மீள அழைக்க வேண்டும் ! மத வெறியும், மதத் தீவிரவாதமும் அனுமதிக்கப்படக் கூடாது

பாகிஸ்தானில் பணிபுரியும் இலங்கையர்களின் பாதுகாப்பை பாகிஸ்தான் அரசாங்கம் உறுதிப்படுத்தா விட்டால், அங்கு பணிபுரியும் அனைத்து இலங்கையர் களையும் திரும்ப அழைக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித் துள்ளார்.

இலங்கைப் பிரஜை கொல்லப்பட்டதையடுத்து பாகிஸ்தானில் வாழும் இலங்கையர்களின் பாதுகாப்பில் பாகிஸ்தான் அரசாங்கம் தலையிட வேண்டும் எனவும், குற்றவாளிகளைத் தண்டிக்க பாகிஸ்தான் அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவிய லாளர் சந்திப்பில் கட்சியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

உலகில் எங்கும் மத வெறியும், மதத் தீவிரவாதமும் அனுமதிக்கப்படக் கூடாது என்றும் அவர் கூறினார்.